இரும்புத்திரை பட இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகர் ஹீரோவா..! யார் தெரியுமா ?

0
496

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான “இரும்பு திரை ” படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சூழ்நிலையில் தேவையான விழிப்புணரவை மக்கள் மத்தியில் தெளிவாக புரியவைத்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

irumbuthirai mithran

புதுமுக இயக்குனர் மித்ரன் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து, தற்போது நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்திக்கை வைத்து தனது அடுத்து படத்தை இயக்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறது என்றும், இந்த படத்தை நடிகர் சூர்யாவின் “சிங்கம் 2 ” படத்தை தயாரித்த பிரன்ஸ் பிக்சர் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க போகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக நடிகர் கார்த்திக் தெளிவான கதைக்களம் கொண்ட படங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான “தீரன் ” படம் நடிகர் கார்த்திக்கிற்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்திருந்தது.

karthi

தற்போது நடிகர் கார்த்திக் “பசங்க” படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கி வரும் “கடைக்குட்டி ” என்ற படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து ஒரு புதுமுக இயக்குனரின் படத்திலும் கமிட் ஆகியுள்ளார் நடிகர் கார்த்திக்.எனவே, இந்த இரு படங்களுக்கு பின்னரே மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.