விஜய் அவார்ட்ஸில் கடைக்குட்டி சிங்கம் படம் பற்றி சூப்பர் தகவலை கூறிய கார்த்தி! குஷியில் ரசிகர்கள்

0
736
karthi

விஜய் டிவி நடித்திய விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் 10 ஆம் ஆண்டு விழா வெகு விமர்சியாக நேற்று நடைபெற்றது. பல்வேறு நடிகர், நடிகைகள் வந்திருந்த இந்த விழாவில் விஜய் சேதுபதி சிறந்த நடிகருக்கான விருதையும், நடிகை நயன்தாரா சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றனர்.

KadaiKuttySingham

இந்த விழாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ‘அறம்’ படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ‘ அபிமான நடிகை என்ற விருதையும் பெற்றார். நடிகை நயன்தாராவிற்கு சிறந்த நடிகைக்கான விருதை சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்திக் வழங்கினார்.

நயன்தாராவிற்கு விருதை வழங்கிய பின்னர் பேசிய கார்த்திக் தான் நடித்து வரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஒரு சுவாரசியமான தகவலை தெரிவித்துள்ளார். அது என்னவெனில் இந்த படத்தில் கார்த்திக்கின் அண்ணன் சூர்யா ஒரு கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளாராம்.

surya

இந்த தகவலை கேட்டதும் அங்கிருந்த சூர்யாவின் ரசிகர்கள் சந்தோச மிகுதியில் ஆராவாரம் செய்தனர். கார்த்திக் மற்றும் ஷேயிஷா நடித்துள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.