தன் முன்னாள் காதலனை பற்றி திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சமந்தா ! அதிர்ச்சியில் கணவன்

0
1227
Samantha

சினிமா துறைகளில் இருக்கும் நடிகைகள் பல பேர் திருமணத்திற்கு பின்னரும் நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் மகன் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்னும் பல படங்களில் நடித்து வருகிறார்.

samantha-chaitu

தென்னிந்திய நடிகையான நடிகை சமந்தா, திருமணத்திற்கு பின்னர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘நடிகையர் திலகம் ‘ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் நடிகை சமந்தா.

நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா, திருமணத்திற்கு முன்னர் தான் காதலித்த நடிகரை பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சமந்தா கூறுகையில் “ நடிகையர் திலகம் படத்தில் நடிக்கும் போது நான் என்னுடைய சொந்த வாழ்கை கதையில் நடிப்பது போன்று தான் உணர்தேன்.அந்த படத்தின் கதையும் ஏன் வாழ்க்கையில் நடந்த கதையும் ஒன்றாக இருக்கிறது என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

அவர் வாழ்க்கையில் நடந்தது என்னவென்றால்,நான் ஒரு நடிகரை கண்மூடி தனமாக காதலித்தேன், ஆனால் நல்லவேளை அவரிடம் இருந்து தப்பித்து விட்டேன். இல்லையெனில் என்னுடைய வாழ்க்கை சாவித்ரி போன்றே ஆகியிருக்கும். நான் நாகசைதன்யாவை சந்தித்து தான் செய்த புண்ணியம் ” என்று தெரிவித்துள்ளார்.