விஜய்யால் பறிப்போன ட்விட்டர் கணக்கு..! வந்ததும் வராதுமா மீண்டும் விஜய்யை சீண்டிய கருணாகரன்..!

0
1578
karunakaranvijay
- Advertisement -

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக திட்டித் தீர்த்தார்கள்.

-விளம்பரம்-

விஜய் ரசிகர்களின் தொடர் விமர்சனத்தால் “ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் பின்னூட்டங்களே அந்த நடிகரின் தரத்தை தெரிவித்துவிடுகிறது” என்று ட்வீட் செய்தார் நடிகர் கருணாகரன். விஜய் ரசிகர்கள் தொடர்ந்து வறுத்தெடுத்து வந்ததால் விஜய் ரசிகர்களை அடிமைகள் என்றும் கூறியிருந்தார் கருணாகரன்.

- Advertisement -

வாக்குக்கவாதம் மிகவும் முற்றிப்போக ஒரு சில ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் தொலைபேசி வாயிலாக கொலை கருணாகரனுக்கு மிரட்டல் விடுத்தாகவும், இதனால் நடிகர் கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களாக எந்த ஒரு பதிவியும் இருந்தார்.

இந்நிலையில் தற்போது விஜய்யின் சர்கார் படத்தின் வசனத்தை கிண்டல் செய்துள்ளார் கருணாகரன். சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நாட்டில் உள்ள கார்பொரேட் கிரிமினல்களை சும்மா விட மாட்டேன் என்று ட்வீட் செய்திருந்தார். அதனை குறிப்பிட்டுள்ள கருணாகரன், சர்கார் படத்தில் வரும் Corporate criminals என்று போட்டதோடு கிண்டலான எமோஜி ஒன்றையும் போட்டுள்ளார். இதனால் மீண்டும் விஜய் ரசிகர்களை வம்பிழுத்துள்ளார் கருணாகரன்.

-விளம்பரம்-
Advertisement