இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு தனது காதலியான சாக்ஷியை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சாக்ஷி தோனியுடன் ஒன்று சேர காரணமாக இருந்த நபர் பற்றி தெரிவித்துள்ளார்.
தோனி மனைவி சாக்ஷி கடந்த 19 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் ஷாக்ஷியின் நெருங்கிய நண்பர்களும் பங்குபெற்றிருந்தனர்.
இந்த பிறந்தநாள் விழாவில் கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா மற்றும் ராபின் உத்தப்பா தனது மணியோடு வந்திருந்தார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த புகைப்படங்கள் ஒன்றில் சாக்ஷி, ராபின் மற்றும் அவரது மனைவி ஸீதளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், அதில் நானும் தோனியும் ஒன்று சேர்ந்ததற்கு காரணமாக இருந்தவர்கள் இவர்கள் தான்.உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி ராபின் மற்றும் ஸீதள்.நீங்கள் வந்ததற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.