லிவிங்ஸ்ட்டின் மகள்களா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க. புகைப்படம் இதோ.

0
98998
livingston
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 80 மற்றும் 90 காலகட்டங்களில் பிரபலமான நடிகர்களில் இருந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற படத்தில் ஒரு ஸ்டேஷன் மாஸ்டராக நடித்து இருந்தார். அதோடு அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் லிவிங்ஸ்டன் பணியாற்றி இருந்தார். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி உள்ளார். இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். 1996 ஆம் ஆண்டு வெளிவந்த சுந்தரப் புருசன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். பின் தொடர்ந்து இவர் கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-
Image result for livingston daughters

- Advertisement -

இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடத்திலும் தான் நடித்து உள்ளார். நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் நடித்து கொண்டு வருகிறார். நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் ஜசின்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என இரண்டு பெண்கள் வாரிசுகள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் தன்னுடைய மூத்த மகள் சினிமா உலகிற்கு வரப் போகிறார் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னரே பேட்டியில் கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : மற்ற ஹீரோக்களுக்கு ஓகே. ஆனால்,விஜயுடன் அப்படி நடிக்க மாட்டேன். ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி.

-விளம்பரம்-

ஜோவிதா தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க போகிறார். அந்த படத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அம்பிகாவின் மகன் ராம் கேசவ் லிவிங்ஸ்டன் மகளுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் பெயர் கலாசல். இந்த படத்தினை கலைத்தாய் பிலிம்ஸ் சார்பில் பி.சி பாலு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருப்பது அஸ்வின் மாதவன். இவர் இயக்குனர்கள் சுந்தர்.C, பத்ரி ஆகியோர் இடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். மேலும், இந்த படத்தில் ராதாரவி, அம்பிகா, மதன் பாப், பானுசந்தர் என பலர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்க உள்ளது என்று கூறப்பட்டது. ஆனால்,இதுவரை இந்த படம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி மக்களை கொள்ளை அடிக்கிறது, எப்படியெல்லாம் அப்பாவி மக்கள் மீது திணிக்கப்பட்டு வியாபாரமாக்குகிறார்கள் என்பது தான் படத்தின் கதை.

Advertisement