ஆரம்பத்தில் எனக்கு பல உதவிகளை செய்துள்ள – அஜித் குறித்து பேசிய மாதவன்.

0
22105
ajithmadhavan
- Advertisement -

தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளமா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு, இயக்குநர் மணிரத்னமிற்கு ரசிகர்கள் உள்ளனர். படத்தை தியேட்டரில் பார்த்து ரசிக்கும் மக்கள் மட்டுமின்றி, திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குநர்களுக்கும் இவர் ஒரு குருநாதர் போல் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். ஆகையால், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களில் பலரும் இயக்குநர் மணிரத்னமின் ரசிகர்களாக இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Actor R Madhavan Gifts Himself An Indian Roadmaster This Diwali

1983-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளி வந்த படம் ‘பல்லவி அணு பல்லவி’. இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மணிரத்னம். இதில் ஹீரோவாக அணில் கபூர் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் ‘உணரு’ என்ற படத்தை இயக்கினார் மணிரத்னம். அதில் கதாநாயகனாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்திருந்தார்.

- Advertisement -

‘உணரு’ படத்துக்கு பிறகு தமிழ் திரையுலகில் என்ட்ரியானார் மணிரத்னம். ‘பகல் நிலவு’ என்ற தமிழ் படத்தினை இயக்கினார். அதன் பிறகு ‘இதய கோயில், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம்’ போன்ற பல படங்களை இயக்கினார் மணிரத்னம்.

R Madhavan talks about his passion for bikes. - YouTube

இதில் ‘அலைபாயுதே’ படம் 2000-யில் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளி வந்தது. இந்த படத்தில் கதையின் நாயகனாக பிரபல நடிகர் மாதவன் நடித்திருந்தார். மாதவனுக்கு ஜோடியாக ஷாலினி டூயட் பாடி ஆடியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. நேற்று முன் தினம் (ஏப்ரல் 14-ஆம் தேதி) இப்படம் வெளி வந்து 20 ஆண்டுகள் ஆகி விட்டது குறித்து ட்விட்டரில் ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டது.

-விளம்பரம்-

தற்போது, நடிகர் மாதவன் இது தொடர்பாக பேசுகையில் “இப்படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த ஷாலினியின் கணவரும், நடிகருமான ‘தல’ அஜித், நான் சினிமாவில் நுழைந்த போது எனக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். எனக்கும் அஜித்திற்கும் ஒரே மாதிரியான டேஸ்ட்.. குறிப்பாக கார் மற்றும் விமானங்கள் மீது உள்ள ஆர்வம். படத்தில் பெரிதும் பேசப்பட்ட ரயிலில் இடம்பெற்ற காட்சியின் படப்பிடிப்பின் போது , நான் எனது மனைவியும், அப்போதைய காதலியுமான சரிதாவை மனதில் நினைத்துக் கொண்டு தான் நடித்தேன். அதேபோல், தான் ஷாலினியும் அஜித்தை மனதில் நினைத்துக் கொண்டு தான் நடித்தார்” என்று மாதவன் தெரிவித்திருக்கிறார்.

Advertisement