நம்பியார் பயன்படுத்திய பொருட்கள் யாருக்கு சொந்தம் – வழக்கு தொடர்ந்த வாரிசுகள், நீதிமன்றம் போட்ட உத்தரவு.

0
1547
- Advertisement -

எம்.என்.நம்பியாரின் பேரன் தன்னுடைய அத்தையின் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர் நம்பியார். இவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் பயணித்திருக்கிறார். இவர் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு தான் இவருக்கு திரைப்படங்களில் வாய்ப்பு வந்தது. பெரும்பாலும், இவர் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தான் மிரட்டி இருந்தார். சொல்லப்போனால், தமிழ் திரை உலகில் வில்லன் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது நம்பியார் தான். அந்த அளவிற்கு கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார் நம்பியார். மேலும், இவர் திரைப்படங்களில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ஹீரோ என்று சொல்லலாம். இவர் சிறந்த ஆன்மீகவாதியாகவும் இருந்தார்.

- Advertisement -

நம்பியார் மறைவு :

இவர் தீவிர ஐயப்பன் பக்தர். தொடர்ந்து இவர் 65 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு சென்று இருந்தார். பின் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அதுவும் ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் கார்த்திகை மாதத்தில் அவர் மரணம் அடைந்ததால் ஐயப்பனின் திருவடிகளை அவர் அடைந்ததாகவே கூறி இருந்தார்கள். நம்பியாருக்கு சுகுமாரன் , மோகன் என இரண்டு மகன்களும், சினேகாலதா என்ற மக்களும் இருக்கின்றனர். எனவே இவர்களுக்கு பாகப்பிரிவினை முறையில் சொத்துக்கள் பிரித்து வழங்கப்பட்டது.

மூத்த மகன் சுகுமாரன் :

இந்நிலையில் நம்பியாரின் மூத்த மகன் சுகுமாரன் அகில இந்திய ஐயப்ப சேவ சங்க தலைவர் ஆவார். அதுமட்டுமில்லாமல் இவர் பாஜக தேசிய நிர்வாக குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இந்நிலையில் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு இவர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவருக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுயகுமாரின் மகன் சித்தார்த்த குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

-விளம்பரம்-

சுகுமாரன் மகன் தொடர்ந்த வழக்கு :

அந்த வழக்கில் “தன்னுடைய தாத்தவின் 500க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், விருதுகள், கோப்பபைகள், சபரிமலை மற்றும் ஐயப்பனின் ஓவியங்கள், பூஜை பொருட்கள் உள்ளிட்ட அவர் பயன்படுத்திய அனைத்தும் தன்னுடைய அத்தை வசம்(நம்பியாரின் மகள்) இருக்கிறது என்றும், ஆவர் அந்த பொருட்களை என்னிடம் ஒப்படைப்பதாக கூறிய நிலையில் தற்போது அந்த பொருட்களை தர மறுக்கிறார் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

எம்.என்.நம்பியார் மகள் மேல்முறையீடு :

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நம்பியாருக்கு சொந்தமான பூஜை மற்றும் விருதுகள் போன்றவற்றை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு வழக்கறிஞர் ஒருவரை நியமித்தது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிரித்து நம்பியாரின் மகள் சினேகலதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், அந்த மேல்முறையீட்டு மனுவில் “தன்னுடைய அப்பா பயன்படுத்திய பொருட்கள் தனக்கே சொந்தம் என்ற கூறியிருந்தார்.

மறுத்த நீதிமன்றம் :

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இவர்கள் இருவரின் மனுவை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நீக்க முடியாது என்றும். இந்த விஷயம் குறித்து விரைவில் அறிக்கை வெளியிட மேலும் ஒரு வழக்கறிஞரை நியமிப்பதாகவும் உத்தரவிட்டது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement