வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு- தமிழ் சினிமா குறித்து பவன் கல்யாண் பேச்சுக்கு நாசர் கொடுத்த பதிலடி

0
1150
- Advertisement -

தமிழ் சினிமா குறித்து பவன் கல்யாண் கூறியதற்கு நாசர் கொடுத்திருக்கும் பதிலடி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பவன் கல்யாண். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவரை ‘பவர் ஸ்டார்ட்’ என்று தான் அழைக்கிறார்கள். இவர் தனது நேர்மையான நடிப்பிற்கும் துணிச்சலான ஆளுமைக்கும் காரணமாக எண்ணற்ற ரசிகர்களை கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ப்ரோ. இந்த படம் தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடிப்பில் வெளிவந்திருந்த ‘வினோதய சித்தம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். தற்போது இந்த படத்தை தான் ப்ரோ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்து இருக்கிறார்கள். மேலும், தமிழில் சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா நடித்த கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றார்கள். தெலுங்கு சினிமாவிற்கு ஏற்றவாறு இந்த படத்தில் பல மாற்றங்களை செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

பவன் கல்யாண் நடிக்கும் படம்:

மேலும், இந்த படம் வருகிற 28ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்திற்கான பிரீ ரிலீஸ் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவன் கல்யாண், தமிழ் சினிமா கலைஞர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் தான் வைக்கிறேன். ஒரு பணியை நம் மக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்க கூடாது. தெலுங்கு சினிமா இன்று செளிப்பாக இருப்பதன் காரணம் இங்கு இருக்கும் மக்கள் எல்லா மொழி மக்களையும் ஏற்றுக் கொண்டது தான்.

தமிழ் சினிமா குறித்து சொன்னது:

எல்லா மொழி மக்களும் ஒன்றிணையும் போது தான் அது சினிமாவாக மாறுகிறது. நம் மக்களுக்கு மட்டும்தான் வேலை கொடுக்க வேண்டும் என்று யோசிக்க கூடாது. அது நம்மை குறுகிய வட்டத்துக்குள்ளே அடைத்து விடும். சமுத்திரகனி தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் தெலுங்கு படங்களை இயக்குகிறார். ப்ரோ படத்தில் கூட பல மொழி பேசும் கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்களை மட்டும் பணியாற்ற வேண்டும் என்ற ஒரு புது விதியை குறித்து நான் கேள்விப்பட்டேன். இதுபோன்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளிய வரவேண்டும். அப்போதான் ஆர்ஆர்ஆர் போன்ற உலகளாவிய படங்களை தமிழ் சினிமா தர இயலும் என்று பவன் கல்யாண் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

நாசர் பதிவிட்ட வீடியோ:

இதனை அடுத்து பவன் கல்யாண் பேச்சு சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், வேறு மொழி நடிகர்கள் தமிழ் படங்களில் பணியாற்ற முடியாது என்ற தகவல் தான் தற்போது பரவி வருகிறது. இது முற்றிலும் தவறானது. இது போன்ற புதுவிதிகள் கொண்டுவரப்பட்டால் அதற்கு முதலாக நான் தான் எதிர்ப்பு தெரிவிப்பேன். இப்போ நாம் பான் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் சினிமா குறித்து நாசர் சொன்னது:

அதனால் பிற மொழிகளை சேர்ந்த நடிகர் நடிகைகளும் இங்கு நடிக்க வைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்த மாதிரி நிலையில் பிற மொழி நடிகர்கள் தமிழ் படங்களில் பணியாற்றக் கூடாது என்ற தீர்மானத்தை போட மாட்டார்கள். தமிழ் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருதி தமிழ்நாட்டுக்குள் படங்களை எடுக்க வேண்டும், தமிழ் திரைப்பட தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதே தவிர மற்றபடி தமிழ் படங்களில் தமிழ் நடிகர்கள் தான் நடிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. பிற மொழிகளிலும் நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்கும் பெருமைமிக்க ஒரு திரையுலகம் தான் தமிழ் சினிமா. வந்தாரை வாழவைக்கும் மாநிலம் இது. இந்த தவறான தகவலை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒன்றாக படங்களை எடுப்போம். அதை உலக அளவுக்கு கொண்டு செல்வோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement