தனது இரு மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் பாண்டியராஜன் எடுத்த அழகான புகைப்படம்.

0
675
pandiaraj
- Advertisement -

நடிகர் பாண்டியராஜனின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பாண்டியராஜன். இவரை புதுமைக் கலை மன்னன் என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் 1959-ஆம் வருடம் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி பிறந்தார். இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாதிரி உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். கலைத்துறையின் மேலுள்ள ஈடுபாட்டால் தன்னுடைய இளம் வயதிலேயே திரைத்துறையில் சேர்ந்தார். மேலும், சினிமாவிற்கு தோற்றம், உயரம் முக்கியம் இல்லை என்பதை நிரூபித்த ஒரு கலைஞர்.

-விளம்பரம்-
Pandiyarajan

பாண்டியராஜன் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது திருட்டு முளியும், வெள்ளந்தியான பேச்சும், விசுக் விசுக்கென நடக்கும் நடை தான். இவர் முதலில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தார். பின் தனது 23 வயதிலேயே சினிமா உலகில் இயக்குனராக பிரபலம் அடைந்தார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், பாண்டியராஜன் அவர்கள் கன்னிராசி படம் மூலம் தான் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

- Advertisement -

பாண்டியராஜன் திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் ஆண்பாவம், மனைவி ரெடி, நெத்தியடி, கபடி கபடி போன்ற 10 படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் பிற கலைஞர்களையும் சினிமாவில் வளர்த்து இருக்கிறார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, ஒளிப்பதிவாளர் நித்யா, நடிகர் மயில்சாமி, நடிகை சீதா போன்ற பல கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே பாண்டியராஜன் தான். இப்படி இவர் தமிழ் சினிமாவில் படைத்த சாதனைகள் ஏராளம். நடுவில் பாண்டியராஜன் அவர்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார்.

pandiyarajan

அண்ணாத்த படத்தில் பாண்டியராஜன் :

இவர் பிறகு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த அண்ணாத்த படத்திலும் பாண்டிராஜ் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்திருந்தது. இதனைத் தொடர்ந்து பாண்டியராஜன் அவர்கள் குணச்சித்திர கதாபாத்திரங்களில் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பாண்டியராஜனின் குடும்ப புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
என்னது நடிகர் பாண்டியராஜனுக்கு 3ன்று மகன்களா ! யார் தெரியுமா ? புகைப்படம்  உள்ளே ! - Tamil Behind Talkies

பாண்டியராஜன் குடும்பம் பற்றிய தகவல்:

பாண்டியராஜன் அவர்கள் 1986ஆம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அன்றைய காலத்தில் இயக்குனராக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக வலம் வந்த அவிநாசி மணியின் மகள் தான் வாசுகி. பாண்டியராஜன் மற்றும் வாசுகி ஆகியோருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். பல்லவராஜன், பிரித்திவ் ராஜன் , பிரேம்ராஜன். இதில் இரண்டாவது மகன் பிரத்திவ் ராஜன் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2006ஆம் ஆண்டு தன் அப்பா பாண்டியராஜன் இயக்கத்தில் ‘கைவந்த கலை’ என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.

வைரலாகும் பாண்டியராஜன் குடும்ப புகைப்படம்:

அதோடு இந்திய சினிமா துறையினருக்கு வைக்கப்பகப்டும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில் விளையாடி வருகிறார் பிரித்திவ் ராஜன். பிறகு இவர் வாய்மை, முப்பரிமாணம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஸ்ட்ரீட் லைட்ஸ் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் தற்போது பாண்டிராஜ் அவர்கள் தன்னுடைய மனைவி, மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாண்டிராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் லைக்ஸ்க்குகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement