பல ஆண்டு கழித்து ஸ்லிம் பிரபுவை பார்க்கப் போறீங்க – பொன்னியின் செல்வன் படத்திற்காக உடல் எடையை குறைக்கும் பிரபு

0
3079
Ponniyin
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்திற்காக உடல் எடையை குறைக்க நடிகர் பிரபு கடினமான உடற் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வருகிறது. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி. ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

-விளம்பரம்-
பிரபு

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, பிரபு, ரஹ்மான், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து இம்முறை ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குகிறார் மணிரத்தனம்.மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது.

- Advertisement -

மத்திய பிரதேசத்தில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்தவர்கள்,. கொரோனா பிரச்சனை காரணமாக அந்தத் திட்டத்தை கைவிட்டனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து விக்ரம்மின் புகைப்படம் ஒன்று வைரலானது.

Chiyan Vikram learns an adventure sport for Ponniyin Selvan - Viral video -  News - IndiaGlitz.com

இந்த படத்தில் பிரபு மற்றும் அவரது மகன் விக்ரம் பிரபு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பொன்னியின் செல்வன் படத்திற்காக இந்த படத்தில் கமிட் ஆகி இருக்கும் பல நடிகர்களும் முடியை வளர்த்து வருவதோடு உடலையும் தேர்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரபுவும் இந்த படத்திற்காக இந்த ரகுமானுடன் இணைந்து கடுமையாக உடற் பயிற்சி செய்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement