இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன் – பிரஜின் எடுத்த திடீர் முடிவு. இது தான் காரணமாம்.

0
517
prajin
- Advertisement -

சின்னத்திரையில் பல வருடங்களாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் ஒரு பிரபலம் என்றால் அது நடிகர் பிரஜின் பத்மநாபன் தான். இவர் முதன் முதலில் முன்பே சன்மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். அந்த சமயங்களில் அனைவரின் மனதையும் குறிப்பாக பெண்கள் மனதை கொள்ளையடித்தவர் இவர். பின்னர் சினிமாவில் துணை நடிகராக தனது கலை பயணத்தை தொடங்கினார். ஜீவா நடித்த டிஷ்யூம் திரைப்படம் தான் இருக்கு முதல் படம்.

-விளம்பரம்-

பழைய வண்ணாரபேட்டை நாயகன் :-

இதற்கிடையே, திரைத்துறை வாய்ப்புகள் சரியான முறையில் அமையாத நேரத்தில், சீரியலில் நடிக்கத் தொடங்கினார். காதலிக்க நேரமில்லை என்ற விஜய் தொலைக்காட்சி சீரியல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் ஹீரோவாகும் வாய்ப்புகளும் கிடைத்தன. இதையடுத்து, பழைய வண்ணாரப்பேட்டை, மணல் நகரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், எதிர்பார்த்தபடி வெற்றிகள் கிடைக்கவில்லை.

- Advertisement -

மலையாள தொகுப்பாளருடன் திருமணம் :-

தமிழ் படங்கள் மட்டுமின்றி, இவர் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, சிறிது காலம் நடிப்பிற்கு முழுக்கு போட்ட இவர், திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். பின்னர், மலையாள சேனலில் தொகுப்பாளாராக பணியாற்றிய சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்தார். இருவரின் திருமணத்திற்கு பிறகு, சாண்ட்ராவும் தமிழ் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபடியும் சின்னத்திரையில் விஜய் தொலைகாட்சியின் சின்னத்தம்பி சீரியலில் நாயகனாக நடித்தார்.

மீன்டும் பட வாய்ப்பு :-

சின்ன தம்பி சீரியல் மூலம், மறுபடி பிரபலமானார் பிரஜின். சீரியலும் மிகப்பெரிய ஹிட். அந்த சந்தோசம் ரெட்டிப்பாகும் வகையில் பிரஜின்- சான்ட்ரா தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் அழகான இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இதையடுத்து சின்னத்தம்பி சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து, விஜய் டிவியில் தொடங்கிய அன்புடன் குஷி என்ற மற்றொரு புதிய சீரியலில் நடிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், நாளடைவில் சீரியல் எதிர்பார்த்தபடி செல்லவில்லை. அதேபோல, அன்புடன் குஷியில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பிரஜினுக்கு மீண்டும் பட வாய்ப்பு வந்தது.

-விளம்பரம்-

ரீ-என்ட்ரி வைதேகி காத்திருநாதாள் :-

இதையடுத்து, அன்புடன் குஷி சீரியலும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. .இந்நிலையில் தற்போது பிரஜின் விஜய் டிவியின் புது சீரியல் ஒன்றில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த சீரியலின் பெயர் வைதேகி காத்திருந்தால். புதிய தொடரில் அவருக்கு ஜோடியாக நடிகை சரண்யா துராடி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மீண்டும் பிரஜினை சின்னத்திரையில் காண ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். அதன் பின் பிரஜின் நடித்த வைதேகி காத்திருந்தால் தொடரில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். சில நாட்களில் சீரியலும் முடிக்கப்பட்டது.இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன்.

சீரியல்களில் இனி நடிக்க மாட்டேன் :-

இந்நிலையில் தற்போது லைவ் வீடியோவில் பேசிய பிரஜின் தான் இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன் என கூறி இருக்கிறார். அவர் தற்போது 7 படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம், அதனால் இனி சினிமாவில் மட்டுமே நடிப்பேன், சீரியல்களுக்கு மீண்டும் வரும் ஐடியா இல்லை என கூறி இருக்கிறார். மேலும் அவரது மனைவி சாண்ட்ராவும் இப்போது இரட்டை குழந்தைகளை கவனிப்பதில் தான் பிசியாக இருக்கிறார். அதனால் அவரும் தற்போதைக்கு சீரியல்களில் ரீ என்ட்ரி கொடுக்க வாய்ப்பில்லை என கூறி இருக்கிறார் அவர்.

Advertisement