தப்பா நெனச்சிக்காதீங்க அடையாளம் தெரியல – மேடை கலைஞனாக இருந்தே போதே எம் ஜி ஆர் பாராட்டை பெற்ற இவர் யார் தெரியுமா ?

0
2225
- Advertisement -

தமிழ் சினிமாவின் 70,80 காலகட்டங்களில் தமிழ் நாடக மேடையில் பிரபல நடிகராக விளங்கியவர் திரு ஏ ஆர் எஸ். என்கின்ற ஏ ஆர் சீனிவாசன். இவர் தொலைக்காட்சி நாடகங்களிலும் திரைப்படங்களையும் நடித்து பிரபலமானவர். இவரை பற்றி இந்த தலைமுறையினர் அறிய நிச்சயம் வாய்ப்பு கிடையாது. இவர் நடித்த ஒரு நாடகத்தை பார்த்த எம்ஜிஆர். இவரை பாராட்டி பேசி இருக்கின்றார்.

-விளம்பரம்-

ஒரு மாதம் கழித்து மற்றொரு நாடகத்தை பார்க்க வருகை புரிந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் அவருடைய மனைவி ஜானகி அம்மா அவர்களை வரவேற்று அவர்களது இருக்கையில் அமர வைத்தவர் திரு ஏ ஆர் எஸ்.அச்சமயத்தில் எம்ஜிஆர் அவர்கள் தன்னை கண்டு கொள்ளவில்லையே என்ற மனவருத்தம் ஏ ஆர் எஸ் க்கு இருந்தது. சிறிது நேரத்தில் எம்ஜிஆர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் ஏ ஆர் எஸ் சென்ற போது எம்ஜிஆர் எழுந்து நின்று அவர் கையை பிடித்துக் கொண்டுள்ளார்.

- Advertisement -

பின்னர் தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள் தம்பி சென்ற மாதம் நீங்கள் மேடையில் மேக்கப்போது இருந்ததால் உங்களை இப்போது சற்றென்று எனக்கு அடையாளம் தெரியவில்லை. என் மனைவி ஜானகி சொன்ன பிறகுதான் எனக்கு உங்களை அடையாளம் தெரிந்தது. தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள் தம்பி என்று என் கையைப் பிடித்து அவர் கூறிய அந்த நிகழ்வு என்னை நெகிழ வைத்தது.

ஒருமுறை நான் பெங்களூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் விமானத்திற்கு உள்ளே அமர்ந்திருந்தேன். என் அருகில் நடிகர் நம்பியார் அவர்களும் லதா அவர்களும் வந்து அமர்ந்தார்கள். சினிமா படப்பிடிப்புக்காக அவர்கள் செல்கிறார்கள்.
நாங்கள் விமானத்தில் ஐந்தாவது வரிசையில் அமர்ந்திருந்தோம். விமானம் புறப்படும் நேரத்திற்கு சிறிது முன்பாக எம்ஜிஆர் அவர்கள் வந்து முதல் வரிசையில் அமர்ந்தார். அவர் அன்றைய செய்தித்தாள்களை ஒவ்வொன்றாக படித்துக் கொண்டிருந்தார்.
நான் ஆங்கில நாவல் ஒன்றை படித்துக் கொண்டிருந்தேன்.

-விளம்பரம்-

விமானம் பெங்களூர் விமான நிலையத்தை வந்தடைந்தது. நான் படித்துக் கொண்டிருந்த நாவலின் இன்னும் சில பக்கங்கள் பாக்கி இருந்தது. எல்லோரும் இறங்குவதற்குள் நாம் அதை படித்து விடலாம் என்ற எண்ணத்தில் நான் அதைப் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று என் தோளில் கையை போட்டு ஒருவர் நான் எம் ஜி ராமச்சந்திரன் என்றார். எனக்கு தூக்கி வாரி போட்டது. நான் சற்றென்று எழுந்து நின்றேன். சாதாரண அமெச்சூர் நாடக நடிகரான என்னை அவர் கண்டுகொள்ளாமல் சென்றிருக்கலாம். \

ஆனால் என்னருகில் வந்து என் நலம் விசாரித்து விட்டு நான் எதற்கு எங்கு செல்கின்றேன் என்ற முழு விவரத்தை தெரிந்து கொண்டு இரவு எட்டு மணிக்கு தான் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு என்னை சாப்பிட அழைத்தார் எம்ஜிஆர் அவர்கள். என்னையும் கையோடு அழைத்துக் கொண்டு என் கையை பற்றி கொண்டு, என்னிடம் பேசிக் கொண்டே விமானத்தை விட்டு இறங்கினார். எம்ஜிஆர் அவர்களை பார்ப்பதற்காக சுமார் 5000 பேர்கள் அங்கு கூடியிருந்தார்கள்.

எம்ஜிஆர் சென்ற பிறகு அந்த 5000 பேரும் என்னை சூழ்ந்து கொண்டு என் கைகளை பிடித்துக் கொண்டு இது எம்ஜிஆர் பிடித்த கை என்று என் கைக்கு முத்தம் கொடுத்தார்கள. அவர்களுடைய அன்புத் தொல்லை மிக அதிகமாக இருந்தது.எம்ஜிஆர் என்ற மாமனிதரின் மகிமை என்னவென்று எனக்கு அப்போதுதான் முழுமையாக புரிந்தது. விமான நிலையத்தை விட்டு வெளியே செல்வதற்கு எனக்கு ஒன்றரை மணி நேரம் பிடித்தது.

எம்ஜிஆர் அவர்கள் அழைத்தது போல் இரவு எட்டு மணிக்கு நான் அந்த ஓட்டலுக்கு சென்று அவருடன் அமர்ந்து உணவு அருந்திவிட்டு இரவு பத்தரை மணி வரை அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். சாதாரண அமெச்சூர் நாடக நடிகரான என்னை அவர் உபசரித்த விதம் என் வாழ்வில் மறக்க முடியாத மாபெரும் நிகழ்வு. எம்ஜிஆர் அவர்களை தவிர வேறு யாராலும் இப்படி நடந்து கொள்ள முடியும்.

Advertisement