ஜனனியின் இந்த கோலத்தை கிண்டல் செய்த பிரபல நடிகர்..! என்ன சொன்னார் தெரியுமா..?

0
174
Bigg-Boss-Janani

காமெடி நடிகரான சதீஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளராக இருந்து வருகிறார். பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் சதீஷ், சமீபத்தில் ஜனனி ஐயரை கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளார்.

Janani

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் வித்யாவசமாக நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்கில் பிக் பாஸ் வீட்டில் அமைக்கபட்டுள்ள தொலைபேசியில் இருந்து அழைப்பு வரும் நபர்கள் அடுத்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யபடுவார்கள். நாமினேட் ஆகும் நபர்கள் நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அந்த அழைப்பில் யாரை குறிபிடிக்கின்றனரோ அவர்களை கன்வின்ஸ் செய்து டாஸ்க்கை செய்ய வைக்க வேண்டும்.

நேற்றய டாஸ்கில் ஜனனி ஐயர், யாஷிகாவிற்காக தனது புருவங்களுக்கு ப்ளீச் செய்துகொள்ள வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. பின்னர் ஜனனி ஐயரும் தனது புருவங்களை ப்ளீச் செய்து கொண்டார். ஜனனி ஐயர் தனது புருவங்களை ப்ளீச் செய்து கொண்டதை ட்விட்டரில் கிண்டல் செய்துள்ள நடிகர் சதீஷ், நல்ல வேலை ஜனனி ரெண்டு கண்ணையும் பிடிங்கி வெளிய போட சொல்லல என்று ட்வீட் செய்துள்ளார்.

Janani-big-boss

ஜனனியிடம் முக்கியமான ஹயிலைட்டாக இருப்பதே அவரது கண்கள் தான். பலரும் அவரது கண்களை முட்ட கண்ணு என்று கிண்டல் செய்துள்ளனர், அதே போல பலரும் அவரது கண்கள் மிகவும் அழகாக இருக்கிறது என்று கூறியுள்ளனர். இந்நிலையில் நடிகர் சதிஸ் ஜனனியின் கண்களை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது ஜனனியின் கண்களை கிண்டல் செய்யும் வகையில் உள்ளது என்று பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.