சத்யராஜ் வீட்டில் முக்கிய நபர் மரணம் – சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர். ரசிகர்கள் ஆறுதல்.

0
2063
Sathyaraj
- Advertisement -

நடிகர் சத்யராஜின் தாயார் இறந்திருக்கும் தகவல் தற்போது மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். “கட்டப்பா” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை தன்பக்கம் கட்டி போட்டவர் சத்யராஜ். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை அடுத்து இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து இருந்தார். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், பிரபாஸின் பாகுபலி படத்தின் மூலம் இவர் மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். அதன் பின் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

சத்யராஜ் திரைப்பயணம்:

அந்த வகையில் கடந்த ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் வீட்ல விசேஷம் . இந்த படத்தில் சத்யராஜின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சத்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த படங்கள் பிரின்ஸ், லவ் டுடே. இதனை அடுத்து தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் சத்யராஜின் தாயார் இறந்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சத்தியராஜ் தாயார் மறைவு:

சத்யராஜின் தாயார் நாதாம்பாள் சுப்பய்யா. இவருக்கு தற்போது 94 வயதாகிறது. வயது மூப்பின் காரணமாக கடந்த சில வருடங்களாகவே இவர் உடல் பிரச்சினைகளால் அவஸ்தைப்பட்டு வந்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இன்று மாலை 4 மணிக்கு இவர் இறந்திருக்கிறார். இவர் கோவையில் தான் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு சத்யராஜ் ஒரே ஒரு மகன் தான்.

-விளம்பரம்-

இரங்கல் பதிவு:

இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தற்போது சத்யராஜ் ஹைதராபாத் படப்பிடிப்பில் இருந்ததால் தன்னுடைய தாயாரின் இறப்பு குறித்து அறிந்து விரைவில் வந்திருக்கிறார். மேலும், சத்யராஜ் தாயாரின் இறுதி சடங்குகள் அனைத்தும் அவருடைய சொந்த ஊரான கோவையில் நடைபெற இருக்கிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து பலரும் சத்யராஜுக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement