மாணவர்கள் மத்தியில் அனைத்து தீய பழக்கங்களும் – நாங்குநேரி சம்பவம் குறித்து மோகன் ஜி

0
2030
mohanG
- Advertisement -

திருநெல்வேலி நாங்குநேரி சம்பவம் குறித்து இயக்குனர் மோகன் ஜி பதிவிட்டிருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் கூலி தொழிலை செய்கிறார். இவருடைய மனைவியின் பெயர் அம்பிகாபதி. இவருக்கு 17 வயதில் சின்னத்துரை என்ற மகனும், 14 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சின்னத்துரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு தங்களுடைய மகனை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டு இருக்கிறார்கள். இதனை அடுத்து பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்து இருக்கிறார்கள். அப்போது சில மாணவர்கள் தன்னை தாக்கி இருப்பதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

நாங்குநேரி சம்பவம்:

இந்த நிலையில் நாங்குநேரியில் உள்ள அந்த மாணவனின் வீட்டில் அந்த மாணவனும், அவருடைய தங்கையும் வீட்டில் தனியாக இருந்தபோது 10:30 மணிக்கு மூன்று பேர் சேர்ந்த கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து இதுவரையும் அரிவாளால் சாரா மாறியாக வெட்டிவிட்டு தப்பி ஓட்டியிருக்கிறார்கள். இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களை மீட்ட நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். இதனை அடுத்து இது தொடர்பாக நாங்குநேரி போலீசாருக்கு மக்கள் தகவல் அளித்து இருக்கிறார்கள். ஆனால், போலீஸ் சம்பவத்திற்கு வரவில்லை.

சாலை மறியல்:

இதை கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சாலையில் மறியல் ஈடுபட்டிருக்கின்றனர். பின் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அண்ணன் தங்கையின் உறவினர் அண்ணன் கிருஷ்ணன் என்பவர் சாலையில் திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து இருக்கிறார்கள். இருந்தாலும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

போலீஸ் விசாரணை:

நாங்குநேரியில் வீடு புகுந்து அண்ணன் தங்கை வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் போலீசும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்த இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின் போலீஸ் விசாரணையில், சின்னத்துரை மாணவன் படிக்கும் பள்ளியில் சில சீனியர் மாணவர்கள் அவரை தொந்தரவு செய்திருக்கிறார்கள். இது குறித்து அவர் பெற்றோரிடமும் தலைமை ஆசிரியர் இடம் கூறி இருக்கிறார்.

மாரி செல்வராஜ் பதிவு:

இதனால் ஆத்திரம் அடைந்த சீனியர்கள் அந்த மாணவனின் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள் என்பது தெளிவு வந்திருக்கிறது. இது தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை மேற்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இது குறித்து இயக்குனர் மோகன் ஜி பதிவிட்டுள் பதிவில் மாணவர்கள் மத்தியில் அனைத்து தீய பழக்கங்களும் பரவி வருகிறது.. சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து உயர்பட்ச தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.. பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தங்கை விரைவாக குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பெரிய அளவில் உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த சம்பவம் குறித்து பதிவிட்டு இருந்த இயக்குனர் மாரி செல்வராஜ் , கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போக சொல்லி, உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்” என்று பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement