ஷாம் நடித்த ‘அஸ்திரம்’ கைக்கொடுத்தா? இல்லையா? படம் எப்படி இருக்கு – முழு விமர்சனம் இதோ

0
162
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஷாம் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அஸ்திரம். இந்த படத்தை அரவிந்த் ராஜகோபால் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நிரஞ்சனி, நிழல்கள் ரவி, ஷங்கர், ஜீவா ரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஷாம் கொடைக்கானல் பகுதியில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். படத்தினுடைய ஆரம்பத்திலேயே மக்கள் அதிகமாக இருக்கும் பார்க்கில் ஒரு நபர், கத்தியை தன்னுடைய வயிற்றில் தானே குத்திக்கொண்டு இறந்து விடுகிறார். இந்த கேசை விசாரிக்க அதிகாரிகள் ஷாமிடம் கொடுக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே மதுரை, சென்னை போன்ற பகுதிகளில் இதே மாதிரி கையில் கத்தியுடன் வயிற்றை கிழித்து இரண்டு பேர் இறந்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இதை லீடாக வைத்து தான் ஷாம் வழக்கை விசாரிக்க தொடங்குகிறார். எதற்காக இப்படி இறக்கிறார்கள்? யார் தூண்டுதலின் பேரில் இந்த மர்ம கொலை நடக்கிறது? இதை ஷாம் கண்டுபிடித்து முறியடித்தாரா? அவருக்கு வெற்றி கிடைத்ததா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. நீண்ட வருடங்களுக்கு பிறகு
ஒரு ஸ்ட்ராங்கான கதாபாத்திரத்தில் ஷாம் நடித்திருக்கிறார். படம் முழுவதுமே ஷாம் தன் தோளில் சுமந்து சென்றார் என்று சொல்லலாம்.

அந்த அளவுக்கு அவருடைய கதாபாத்திரமும் அவருடைய நடிப்பும் இருந்திருக்கிறது. அதோடு படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை யார் கொலை செய்கிறார்? யார் கொலை செய்ய தூண்டுகிறார்? என்ற விறுவிறுப்பிலேயே இயக்குனர் கதையை கொண்டு சென்றிருக்கிறார். அதோடு படத்தினுடைய முதல் பாதி வேற லெவலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இரண்டாம் பாதி தான் கொஞ்சம் சுதப்பி இருக்கிறார். குறிப்பாக பிளாஷ்பேக்கில் சொன்ன கதையில் இயக்குனர் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோட பிளாஷ்பேக் நீளத்தையும் குறைத்து இருக்கலாம். இவரை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பின்னணி இசை எல்லாமே நன்றாக இருக்கிறது. ஒரு சிறப்பான திர்ல்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறது. குறைவான பட்ஜெட்டில் இப்படி ஒரு அருமையான திரில்லர் படம் உருவாகி இருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. மொத்தத்தில் ஷாமிற்கு இந்த படம் ஒரு கம்பேக்காக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நிறை:

ஷாமின் நடிப்பு அருமை

முதல் பாதி சூப்பராக இருக்கிறது

கதைக்களம் ஓகே

பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

பிளாஷ்பேக் கதை நன்றாக இருக்கிறது

குறை:

இரண்டாம் பாதி பொறுமையாக செல்கிறது

படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் அஸ்திரம் – நல்ல முயற்சி

Advertisement