மீண்டும் சர்ச்சையில் மாட்டிய பீஸ்ட் பட நடிகர் – பெண் இயக்குனர்கள் பற்றிய பேச்சால் சிக்கல்.

0
492
Shine Tom Chacko
- Advertisement -

பெண் இயக்குனர்கள் பற்றி பீஸ்ட் பட நடிகர் பேசியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் முடி சூடா மன்னனாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த படம் பேன் இந்திய படமாக வெளியாகி இருந்தது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருந்தார். படத்தில் ஒரு மால்-லை தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள்.

- Advertisement -

பீஸ்ட் படம்:

எதர்ச்சையாக கடத்தப்படும் மால்-லில் விஜய் சிக்கிக் கொள்கிறார். இறுதியில் விஜய், மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? என்பது தான் படத்தின் மீதி கதை. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்று கூறி இருக்கிறார்கள். அதோடு பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

டாம் சாக்கோ திரைப்பயணம்:

மேலும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தவர் டாம் சாக்கோ. இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் போது மனதில் உள்ளதை பேசுகிறேன் என்று சொல்லி ஏடாகூடமாக ஏதாவது ஒன்று பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.அந்த வகையில் பீஸ்ட் படம் வெளிவந்த போது அந்த படம் என்னை ஈர்க்கவே இல்லை.

-விளம்பரம்-

பீஸ்ட் படம் குறித்து சொன்னது:

பீஸ்ட் படத்தில் சரியாக காட்சிகள் அமைக்கவில்லை. இயக்குனர் சரியாக என்னை பயன்படுத்திக் கொள்வில்லை. அதனால் நான் பீஸ்ட் படத்தை பார்க்கவே இல்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இப்படி இவர் பேட்டியில் கூறியிருக்கும் பல விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகி இருக்கிறது. இந்த நிலையில் பெண் இயக்குனர்கள் குறித்து இவர் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, சமீபத்தில் பிரஸ்மீட் ஒன்றில் டாம் சாக்கோ அவர்கள் கூறியிருந்தது, சினிமா துறையில் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் சில பிரச்சனைகள் இருக்கிறது என்று கூறினார்.

பெண் இயக்குனர்கள் குறித்து சொன்னது:

உடனே, பெண் இயக்குனர்கள் அதிகம் இருந்தால் தவிர்க்கலாம் அல்லவா? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு பதில் அளித்த சாக்கோ, பெண் இயக்குனர்கள் அதிகம் வந்தால் பிரச்சனைகளும் அதிகம் வரும். எங்கையாவது பெண்கள் ஒன்று கூடும் இடத்தில் சண்டை நடக்காமல் இருக்கிறதா? என்று கிண்டலாக பதில் அளித்து இருக்கிறார். இப்படி இவர் கூறியதன் மூலம் பெண்களை இவர் அடிமட்டமாக நினைப்பவர், பெண்களுக்கான அங்கீகாரம் தராதவர் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் இவர் குறித்து சர்ச்சை எழுந்து வருகிறது.

Advertisement