பெண்களிடன் எல்லை மீறுகிறாரா அசல் கோளாறு – வைரலாகும் வீடியோ. Meme போட்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
837
asal
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களிடம் அசல் கொலார் அத்துமீறி நடப்பதை குறித்து நெட்டிசன்கள் விமர்சிக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. அந்த வகையில் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் அசல் கொலார். afro என்பவருடன் தனியிசைப் பாடல்களை உருவாக்கியுள்ளார் அசல் கொலார் ‘ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். அசல் சென்னை கானாவை கொஞ்சம் பட்டி டிங்கரின் செய்து வித்தியாசமான fast beatடுடன் வெளியான இந்தப் பாடல் செம்ம ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார்.

அசல் பணியாற்றிய படங்கள்:

அதன் பின் இவர் சந்தோஷ் நாராயாணன் இசையில் குலுகுலு, மஹான் படங்களிலும், யுவன் இசையில் காஃபி வித் காதல் படத்திலும் பாடல்கள் எழுதி இருக்கிறார். அதேபோல், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் ‘லைஃப் ஆப் பேச்சுலர்’ பாடலை எழுதி இருக்கிறார். வசந்த குமார் என்ற தனது பெயரை அசல் கொலார் என மாற்றிவைத்து இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவது என்று இருக்கிறார்.

-விளம்பரம்-

பெண்களிடம் அசல் நடந்து கொள்ளும் முறை:

அதிலும் நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது நாளிலேயே ஆயிஷாவிடம் வாடா, போடா என்று பேச தேவையில்லை என்றெல்லாம் வம்பு இழுத்து இருந்தார். ஆனால், குயின்சி, நிவாஷினியிடம் இவர் வழிந்து வழிந்து பேசி இருக்கிறார். அந்த வகையில் குயின்சி மீது ஆரம்பத்தில் இருந்தே அசல் கொலாருக்கு ஒரு கண் இருக்கிறது. விக்ரமனனுடன் குயின்சி பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய கையை மாவு பிசைவது போல அசல் பிசைந்து கொண்டு இருந்தார். ஆனால், இது குயின்சிக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை செய்வது தவறு என்றெல்லாம் அசலை கண்டித்து பதிவு போட்டு இருந்தார்கள்.

அசலை திட்டும் ரசிகர்கள்:

பின் குயின்சி செட் ஆகவில்லை என்று நினைத்து சிங்கப்பூர் மாடல் அழகி நிவாசினிடம் கடலை போட ஆரம்பித்தார் அசல். அதுமட்டுமில்லாமல் நிவாஸினியிடம் நீச்சல் குளம் அருகில் படுத்து கொண்டு அசல் கடலை போட்டு இருக்கிறார். இந்த காட்சியையும் ரசிகர்கள் எடுத்து போட்டு திட்டி தீர்த்து இருக்கின்றனர். இப்படி பெண்களிடம் அசல் செய்யும் செயல்களெல்லாம் முகம் சுளிக்கும் அளவு இருப்பதாக ரசிகர்கள் பலரும் கடுமையாக கண்டித்து வருகின்றனர். அதோடு அசல் குறித்து மீம்ஸ்களை சோசியல் மீடியாவில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Advertisement