செந்தில் பாலாஜி தரப்பு மனு : அமலக்காதுறையின் ஆவணங்களை கேட்ட செந்தில் பாலாஜி தரப்பு மனு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.   

0
1229
- Advertisement -

செந்தில் பாலாஜியிடம் ஆரம்பம் முதல் விசாரித்த வழக்கின் ஆவணங்களை வழங்க கோரி மனு தாக்கல் செய்த செந்தில் பாலாஜி தரப்பு. சென்னை முதன்மை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை புழல் சிறை அதிகாரிகளிடம் அளித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை பலத்த பாதுகாப்புடன் மூன்று கார்களில் அவரை ஏற்றி சென்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்க துறை அலுவகத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் 5 நாட்கள் விசாரணை நடைபெற்ற உள்ளது.

-விளம்பரம்-

அமைச்சரின் வழக்கு:

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக ஏமாற்றி விட்டார் என சில பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை கைது செய்த நிலையில் அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு வெவ்வேறு தீர்ப்பினை வழங்க வழக்கு மூன்றாவது நீதிபதிகள் அமர்வுக்கு சென்றது. மூன்றாவது அமர்வு அவர் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டு தான் என்றும் அவர் குணமடைந்த பிறகே அவரை விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கின.

- Advertisement -

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:

இரவு 8 மணியளவில் புழல் சிறையில் இருந்து அமலாக்க துறையினரால் நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனிற்கு அவரை விசாரனைக்காக அவரை அழைத்து சென்றது. அவரிடம் விசாரணை ஆரம்பித்தது தகவல்கள் தெறிவிக்கின்றன. மேலும் அவருக்கு இரண்டு முறை மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலையே மருத்துவ குழு வந்து அவரை பரிசோதித்து விட்டு சென்ற நிலையில் தற்போது விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றன.

குற்றப்பத்திரிகையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்ற பத்திரிகை மற்றும் 2700 ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பக்கமும் காவலர்களுடன் நீதிமன்றம் வந்தடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜி. அனைத்து ஆவணங்களும் இரும்பு பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது அமலாக்கத்துறை.

-விளம்பரம்-

நகல்களை கேட்ட செந்தில்பாலாஜி தரப்பு:

இந்த வழக்கு தொடங்கியது முதல் தன்னிடம் விசாரிக்கப்பட்ட அனைத்தும் உட்பட அமலாக்க துறை சார்பில் வழங்கப்பட்ட 2700ஆவணக்களையும் தங்களிடம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. இதனை அடுத்து ஆவணங்களின் நகல்களையும் வழங்குமாறு அமலக்காதுறை க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கானது புதன் கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.

இருதிங்களுக்கு முன் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரை கொச்சியில் வைத்து கைது செய்தாக தகவல் வெளியான நிலையில் அமலாக்க துறை அதனை மறுத்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.

Advertisement