விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.மேலும், சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு பெற்று இருக்கிறது.
கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.தற்போது புத்தம் புதிதாக சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
அது மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் டிஜே பிளாக். இவரை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் வரும் காமெடிகளுக்கும், அட்ராசிட்டியும் இவருடைய பங்கு உண்டு. அதிலும் இந்த சீசன் தொடங்கியதில் இருந்து இவருடைய pick up லைன்களுக்கு எல்லைக்கு அளவில்லாமல் போய்விட்டது.இ வர் இந்த சீசன் போட்டியாளர் பூஜாவிற்கு போடும் pick up லைன்கல் எல்லாம் வேற லெவலில் இருக்கும்.
இதை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் அழகாக எடிட் செய்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் பூஜாவின் குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு வந்த்து இருந்தனர். அப்போது வழக்கம் போல dj பிளாக் பூஜாவிற்கு Pick up லைனை போட்டார். இதனால் கடுப்பான பூஜாவின் அம்மா ‘ நீங்கள் செய்வது சரியில்லை. ஒரு பெண்ணை குறித்து இப்படி எல்லாம் பாடல் போடுவதா? எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றெல்லாம் கடுமையாக பேசி இருந்தார்.
இதைக்கேட்டு டிஜே பிளாக்- பூஜா உடன் அரங்கில் இருந்தவர்களும் அதிர்ந்து போய்விட்டார்கள். பின்னர் டான் இது prank என்று பலருக்கும் தெரிந்தது. இப்படி ஒரு நிலையில் பூஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் dj பிளாக்குடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை போட்டு ‘நீங்கள் அனைவரும் அந்த பிராங்கை என்ஜாய் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி இல்லை என்றால் யாருக்காவது மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.