இதெல்லாம் பெண்கள் கிட்ட கேட்க கூடாதுனு உங்களுக்கு தெரியாதா ? கடுப்பான சாட்டை பட நடிகை.

0
4193
- Advertisement -

தமிழில் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சாட்டை படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்தவர் நடிகை மஹிமா நம்பியார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், தனது 15 வயதிலேயே மலையாளத்தில் வெளியான காரியஸ்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மஞ்சுமா நம்பியார் அதன் பின்னர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்த இவர் சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை மஹிமா நம்பியார்.

-விளம்பரம்-
Mahamuni Actress Mahima Nambiar Saree Pics - Telugu Actress Gallery

சாட்டை படத்திற்கு பின்னர் மொசக்குட்டி குற்றம்23 கொடிவீரன் இரவுக்கு ஆயிரம் கண்கள் அண்ணனுக்கு ஜே மகாமுனி போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார். தற்போது அயங்கரன், அசுரகுரு போன்ற படங்களில் நடித்துவந்தார். இந்த நிலையில் இவர் நடித்துள்ள அசுரகுரு படத்திம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை கண்டிப்பாக கவரும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அது மட்டுமின்றி தைரியமாக புகைப்பிடிக்கும் காட்சியில் கூட நடித்திருந்தார் அம்மணி. ஆனால், இந்த படம் அம்மணி எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதுவும் தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள அம்மணி அடிக்கடி சமூக வலைதள பக்கம் வருகிறார்.

mahima

அந்த வகையில் சமீபத்தில் இவர், நேரலையில் தோன்றி, ரசிகர்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் முகம் சுளிக்காமல் பதிலளித்தார். வரிசையாக பதிலளித்து வந்த அவரிடம் ஒரு ரசிகர், ‘உங்கள் வயசு என்னன்னு வெளிப்படையா சொல்ல முடியுமா மகிமா ? என்று கேட்டார். அதுவரை ஜாலியாக பதிலளித்துக் கொண்டிருந்த மகிமா ஹலோ, ஆண்கள் கிட்ட அவங்க வருமானத்தை பற்றியும், பெண்கள் கிட்ட அவங்க வயசு பற்றியும் கேட்க கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா ? இதுக்கு நான் பதில் சொல்லமாட்டேன் என்றார்.

-விளம்பரம்-

அதன் பின்னரும் அம்மணி ரசிகர்கள் கேட்கும் மற்ற கேள்விக்கு பதில் அளித்து வந்தார். தற்போது கிட்னா என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் தமிழ், மலையாளம் கன்னடம், தெலுங்கு என்று நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இருப்பினும் எல்லாம் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு தளர்வதர்க்காக வைட்டிங்.

Advertisement