தன்னுடன் சேர்ந்து படத்தில் நடிக்க மாட்டேன் சித்தார்த் கூறியதாக எஸ்வி சேகர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல், பின்னணி பாடகர், திரைக்கதை, எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி இருந்த படம் டக்கர். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்து இருக்கிறது. கார்த்திக் ஜி கிரிஸ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஜி படத்தில் திவ்யான்ஷா, யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சோசியல் மீடியாவில் சித்தார்த் :
இது ஒரு பக்கம் இருக்க, சித்தார்த் எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்ட்டிவாக இருக்கிறார். சமுதாயத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்வது வழக்கமான ஒன்று. அதுமட்டும் இல்லாமல் இன்றைய காலகட்டத்தில் நம்முடைய கருத்துக்களை வெளிப்படுத்துவது அவசியமான ஒன்று என்றும் கூறி இருக்கிறார். அதோடு நடிகர் சித்தார்த் பிஜேபி குறித்தும் மோடி குறித்தும் பல முறை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
பிஜேபி குறித்து சித்தார்த் :
கருப்பு பணம் விவகாரத்தில் இருந்து குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்தில் வரை மத்திய மற்றும் மாநில அரசு என எந்தத் தரப்பையும் விட்டு வைக்காமல் விமர்சனம் செய்து வந்தார். அவ்வளவு ஏன் டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்தும் ட்வீட் செய்து இருந்தார் சித்தார்த். மேலும், கடந்த ஆண்டு மோடியின் வாழக்கை வரலாற்று படத்தின் ட்ரைலர் வெளியான போது அதனை விமர்சித்து கூட ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். இப்படி பிஜேபிக்கு எதிராக சோசியல் மீடியாவில் சித்தார்த் கருத்து சொல்லி வருவது அனைவரும் வந்ததே.
எஸ் வி சேகர் அளித்த பேட்டி;
இந்த நிலையில் பிஜேபிக்கு ஆதரவாக இருக்கும் எஸ் வி சேகர் படத்திலும் நடிக்க மாட்டேன் என்று சித்தார்த் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, சமீபத்தில் எஸ் வி சேகர் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர் சித்தார்த் குறித்து கூறியது, நான் ஒரு படத்தில் நடிக்க இருந்தேன். அந்த படத்தில் சித்தார்த்தும் நடிக்க இருக்கிறார். ஒருநாள் தயாரிப்பாளர் என்னுடைய வீட்டிற்கு வந்து நீங்கள் இந்த படத்தில் நடிப்பதால் சித்தார்த் உங்களுடன் சேர்ந்து நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.
சித்தார்த் குறித்து சொன்னது:
காரணம் நீங்கள் பிஜேபிக்கு ஆதரவளிக்கிறீர்கள், அவர் பிஜேபிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் முடியாது என்று சொல்லிவிட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை, படத்திற்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. நான் என்ன படத்தில் பிஜேபி வாழ்க என்று சொல்லப் போகிறேனா? இல்ல அவர் ஒழிக என்று சொல்லப் போகிறாரா? எனக்கு கொடுத்த டயலாக்கை நான் பேச போகிறேன். அவருக்கு கொடுத்த வசனத்தை அவர் பேசப்போகிறார். மற்ற நேரத்தில் நான் கேரவனில் உட்கார்ந்து கொண்டிருக்கப் போகிறேன். இதில் என்ன அவருக்கு பிரச்சனை என்று சொல்லி இருக்கிறார்.