சிம்புவின் வெந்து தணிந்தது காடு என்ன ஆனது? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0
313
- Advertisement -

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் குறித்து ரசிகர்கள் பதிவிடும் கமெண்ட்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக தூள் கிளப்பி கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
STR

ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். பின் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

- Advertisement -

மாநாடு படம்:

அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தர். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

வெந்து தணிந்தது காடு படம் :

இதை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்ததாக மகா திரைப்படம் வெளியாகி இருந்தது. தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிம்புவுடன் ராதிகா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள். படத்தில் சிம்பு அவர்கள் தன்னுடைய அம்மா, தங்கையுடன் வாழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

படத்தின் கதை:

இவர் வயக்காட்டில் வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை பாதுகாத்து வருகிறார். அப்போது ஒரு நாள் வயக்காட்டில் வேலை செய்யும் போது சிம்புவுக்கு விபத்து ஏற்படுகிறது. இதை நினைத்து அவருடைய தாய் பயப்படுகிறார். பின் உறவினர் மூலம் சிம்புவுக்கு வேறு ஒரு வேலைக்கு அனுப்ப முயற்சி செய்கிறார். இந்த சூழ்நிலையில் தான் உறவினரும் தற்கொலை செய்து கொள்கிறார். பின் சிம்பு மும்பைக்கு செல்கிறார். அங்கு பரோட்டா கடையில் வேலை செய்கிறார். எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் கும்பலில் சிம்பு சிக்கி கொள்கிறார்.

ரசிகர்கள் கமெண்ட்ஸ்:

இறுதியில் சிம்புவின் வாழ்க்கை என்ன ஆனது? சிம்புவின் குடும்பத்தின் நிலைமை என்ன? சொந்த ஊருக்கே சிம்பு திரும்பினாரா? என்பது தான் படத்தின் மீதி. காதல், கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தில் ஏ ஆர் ரகுமான் இசைகளும் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சிம்புவின் படத்தை ரசிகர்கள் திருவிழா போன்று திரையரங்களில் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் திரையரங்கில் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் படத்தை குறித்து பாசிட்டிவான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த படம் மாபெரும் வெற்றி அடையும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

Advertisement