“எங்கள் பரம்பரையில் முதல் டாக்டர்” சிவகார்த்திகேயன் உதவியால் மருத்துவ கனவை எட்டிய மாணவி.

0
547
- Advertisement -

சிவகார்த்திகேயனால் ஏழை மாணவியின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணியை அடுத்த பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த டெய்லர் கணேசன்- சித்ரா ஆகியோரின் மகள் சஹானா. கஜா புயலால் சேதமடைந்த வீட்டில் மின்சார வசதி இல்லாததால் சூரிய வெளிச்சத்திலும், பள்ளி அருகே இரவில் தெருவிளக்கு வெளிச்சத்திலும் படித்த இவர், மருத்துவராக வேண்டும் என்ற உறுதியுடன் நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்திவந்துள்ளார்.மாணவி சஹானாவின் நிலையை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், சஹானாவை தஞ்சாவூரில் உள்ள தனியார் நீட் பயற்சி மையத்தில் சேர்த்து, கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி பெற உதவி செய்தார்.

-விளம்பரம்-
Image

அவர்கள் மருத்துவ படிப்பிற்கான முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அரசு பள்ளி மாணவர்களுக்காக முதலமைச்சர் பிறப்பித்த உள் ஒதுக்கீடு ஆணையம் தனது மருத்துவ கனவை நிறைவேற்றியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் மாணவி சகானா.

- Advertisement -

இந்நிலையில், நடந்து முடிந்து நீட் தேர்வில் 273 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்து, கடந்த நவம்பர் 9 சேர்ந்தார் சஹானா . மேலும், சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ள மாணவி சகானா எனது மருத்துவ கனவிற்கு உயிர் கொடுக்க பலரும் உதவி செய்தனர். நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் எனது கனவு நனவாகியுள்ளது என்றும் கூறியிருந்தார்.

image

சிவகார்திகேயனால் மூலம் நீட் தேர்வில் வெற்றிப் பெற்று தனது மருத்துவ கனவை நனவாக்கியிருக்கிறார்.  இது குறித்து சஹானாவின் தாய் சித்ரா கூறும் போது, மின்சாரம் கூட இல்லாத வீடு, எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மருத்துவ படிப்பு என்பது ஏழை வீடுகளுக்கு எடுபடுமா என்று இருந்த எங்களுக்கு என்னுடைய மகள் தற்போது மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் பரம்பரையில் இவர்தான் என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement