தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது விஜய் ரஜினி என்று மாஸ் நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள். அதேபோல விஜய் சேதுபதி பற்றி பல அரிதான புகைப்படங்கள் அரிதான விஷயங்கள் என்று சமூக வலைத்தளத்தில் பலரும் பகிர்ந்து வந்தார்கள். அந்த வகையில் எடிட்டர் அபினவ் சுந்தர் நாயக் என்பவர் விஜய் சேதுபதி குறித்து ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.
எடிட்டர் அபினவ் சுந்தர் தமிழில் வெளியான உரியடி குரங்கு பொம்மை போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் விஜய் சேதுபதி குறித்து இவர் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 2012ஆம் ஆண்டு நடந்த ஒரு சின்ன சம்பவத்தை பகிர ஆசைப்படுகிறேன். நான் சென்னை வடபழனியில் ஒரு சிறிய 1bhk flat ஒன்றில் வாடகைக்கு எடுத்து அங்கே எடிட்டிங் வேலைகளை செய்து வந்தேன். ஒரு நாள் மதியம் நான் என்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்த போது என்னுடைய பில்டிங்கில் கீழே ஒரு கார் பார்க் செய்யப்பட்டு இருந்தது.
இதையும் பாருங்க : மேள தாள சரவெடி, ரோட்டில் குத்தாட்டம் – ரம்யா பாண்டியனை வரவேற்ற குடும்பத்தினர். வைரலாகும் வீடியோ இதோ.
அதிலிருந்து தாடியுடன் ஒரு நபர் மூன்றாம் மாடி வரை ஏறி வந்தார், அங்கே தான் நான் நின்று கொண்டிருந்தேன். அது விஜய் சேதுபதி, பீட்சா நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்கள் எல்லாம் அப்போது வெளியாகவில்லை. இருப்பினும் அவரை நான் அடையாளம் கண்டு கொண்டேன். அவர் நேராக என்னிடம் வந்து ‘அபினவ் தானே’ என்றார் ஒரு கணம் நான் குழம்பிப்போய் ஆமாம் என்றேன். அதற்கு அவர் ‘தலை வலிக்குது கொஞ்ச நேரம் இங்கே தூங்கட்டுமா’ என்றார் நானும் சரி என்று சொல்லிவிட்டு அவரை உள்ளே அழைத்தேன். என் வீட்டில் தரையில் படுக்கையும் 2 பீன் பேக்குகளும் இருந்தது. அவர் அந்த பீன்பேக்கில் அமர்ந்து ‘ இது போதும்’ என்று கண்ணை மூடினார்.
அவரிடம் என்ன பேசுவது என்று எனக்கு தோன்றவில்லை. பின்னர் அவர் கண்கள் அசந்ததை பார்த்து விட்டு அமைதியாக அந்த அறையிலிருந்து வந்து கதவை சாத்திவிட்டு வந்துவிட்டேன். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து அந்த ரூமில் இருந்து அவர் வந்து ‘ஒரு டீ கிடைக்குமா’ என்றார். நானும் சரி என்று சொல்லிவிட்டு சென்று விட்டேன் . விஜய்சேதுபதி வேறு எதுவும் பேசாமல் கதவுக்கு வெளியில் போய் நின்றுகொண்டு அந்த சூடான மதியப் பொழுதில் அமைதியாக நின்று கொண்டிருந்தார். பின்னர் அவருக்கு நான் பிளாக் டீ கொடுத்தேன். அவர் வேகமாக அதை குடித்து விட்டார். நான் அந்த டீ கப்பை எடுப்பதற்குள் அவரே என்னிடம் இல்ல பரவாயில்ல நானே வாஷ் பண்றேன் என்று கூறி விட்டு நேராக சென்று கப்பை கழுவிவிட்டு பின்னர் என்னை பார்த்து லேசான ஒரு சிரிப்பு சிரித்தார். எனக்கு ஒன்றும் புரியாமல் நானும் மீண்டும் அவரைப் பார்த்து சிரித்தேன். பின்னர் நேராக அவர் வெளியில் சென்று நன்றி அபிநவ் அப்புறம் பார்க்கலாம் என்று கூறி விட்டு கிளம்பி விட்டார். கொஞ்சம் மாதங்கள் கழித்து பீசா ரிலீசானது அதன்பின்னர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் சிறிது ஆண்டுகள் கழித்து சூதுகவ்வும் பின்னர் மற்றவை எல்லாம் வரலாறு தான் என்று கூறியுள்ளார் அபிநவ்.