நடிகை ஜோதிகா திருமனத்திற்கு பின்னரும் வருசையாக படங்களில் நடித்து வருகிறார்.மேலும் சமீபத்தில் பாலா இயக்கத்தில் இவர் நடித்த நாச்சியார் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் தற்போது நடிகை ஜோதிகா செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ஜோதிகா.ஹிந்தியில் பிரபல நடிகை வித்யாபாலன் நடித்த தும்ஹாரீ சுலு என்ற ஹிந்திப்படத்தின் ரீ மேக் தான் அந்த படம்.
இந்த படத்திற்கு காற்றின் மொழி என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால் இந்த பெயருக்கு முன்னாள் இந்த படத்திற்கு ஜோ என்று தான் பெயர் வைத்தார்களாம்.அதற்கு ஜோதிகவும் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜோதிகாவின் கணவரான சூர்யா “ஜோ” என்று அந்த படத்திற்கு பெயரிடுவதை விரும்ப வில்லையாம் .அதன் பின்னரே அந்த படத்திற்கு “காற்றின் மொழி” என்று பெயர் மாற்றம் செய்துவிட்டனராம்.
மேலும் நடிகை ஜோதிகா தற்போது செக்க சிவந்த வானம் என்ற மணி ரத்தினம் படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்தவுடன் காற்றின் மொழி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.