தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா தொடர்பாக நடிகர் தாடி பாலாஜி போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவர் 1997 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து இருந்தார். இவர் பெரும்பாலும் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார்.
அது மட்டும் இல்லாமல் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து இருந்தார்.
பின் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருந்தார். பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பாலாஜி கலந்து கொண்டிருந்தார். அதோடு இந்த நிகழ்ச்சியில் இவருடைய மனைவி நித்யாவும் கலந்து இருந்தார். சில ஆண்டுகளாகவே தாடி பாலாஜிக்கும் அவருடைய மனைவி நித்யாவிற்கும் இடையே பிரச்சனை இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.
பாலாஜி குறித்த தகவல்:
இவர்களுடைய விவகாரம் கோர்ட் வரை சென்றிருக்கிறது. தற்போது இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும், இவர்களுக்கு மத்தியில் சர்ச்சை நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க நடிகர் தாடி பாலாஜி அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். இவர் முதலில் திமுக கட்சியில் தான் இருந்தார். விஜய்,அரசியல் தொடங்குகிறார் என்று தெரிந்ததுமே இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டார்.
விஜய் கட்சியில் பாலாஜி:
ஆரம்பத்தில் இது தொடர்பாக கேட்டபோது பாலாஜி, விஜய் சொன்னதற்காக வேலை செய்கிறேன் என்று சொன்னார். அதன் பிறகு பாலாஜி தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராகவே இணைந்து விட்டார்.
சமீபத்தில் கூட விஜய் உடைய உருவத்தை டாட்டுவாக தன்னுடைய நெஞ்சில் குத்தி இருந்தார் பாலாஜி. இதை வீடியோவாகவும் பாலாஜி வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவுடன், டாட்டுக்குத்திய போது ஏழு மணி நேரத்தை வலியை தாங்கிக் கொண்டிருந்தேன் என்றெல்லாம் கூறியிருந்தார்.
தவெக விழா:
இதை அடுத்து தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி இரண்டாவது ஆண்டை அடி எடுத்து வைப்பது தொடர்பாக விழா நடத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த விழாவில் புதிய பொறுப்பாளர்களையும் விஜய் அறிவித்திருந்தார். அதில் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் போன்ற பலருக்குமே பொறுப்புகள் வழங்கப்பட்டது. தாடி பாலாஜிக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு எந்த பொறுப்புகளுமே கொடுக்கவில்லை.
பாலாஜி பதிவு:
இந்நிலையில் இது தொடர்பாக தாடி பாலாஜி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஆதவ் அர்ஜுனாவை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்கும் வீடியோவையும், தான் நெஞ்சில் விஜய் உருவத்தை டாட்டூவாக குத்திய போட்டோவையும் ஒப்பிட்டு, அவளோ புது பாய் பிரண்டோட ஹாப்பியா இருக்கா தற்குறி நானே அவள் நினைவோடு என்று போட்டு இருக்கிறார். பாலாஜிக்கு பொறுப்பு எதுவும் கொடுக்காத விரக்தியில் தான் இப்படி எல்லாம் பேசுகிறார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.