மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பற்றி நடிகர் தம்பி ராமையா பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைக்கோ கலந்து கொண்டிருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் தம்பி ராமையாவும் வருகை தந்திருந்தார். பின் நிகழ்ச்சியில் தம்பி ராமையா, வைகோ சினிமாவில் மட்டும் கால் பதித்திருந்தால் இந்த நாட்டினுடைய ஒரே சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பார்.

அவருடைய கண் புருவத்திற்கும் குரலுக்கும் கம்பீரத்திற்கும் அவருடைய மூக்கின் அழகிருக்கும் அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. வைகோவை தவிர வேற யாரும் சூப்பர் ஸ்டார் ஆக இருந்திருக்க முடியாது. அவர் சினிமாவிற்கு வந்திருந்தால் அமிதாபச்சனை வைகோவிடம் பிச்சை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் அரசியலை தேர்ந்தெடுத்து விட்டார் . ஒருமுறை இசை மேடைக்கு வைகோ வந்திருந்தார். அப்போது அவர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கையில் சிறு குறிப்பு கூட இல்லாமல் பேசி இருந்தார்.
விழாவில் தம்பி ராமையா:
அந்த விழாவில் அவர் பேசி இருந்ததை பார்த்து ரஜினிகாந்தே வியந்து விட்டார். இன்று அனைவரும் அவர்களுடைய பரிணாம வளர்ச்சிக்காக தான் தம்பி துரை வைகோவை பார்க்கிறேன். அவர், நான் பெரியாரையும் வணங்குவேன், பெருமாளையும் வணங்குவேன் என்று சொன்னார். இதுதான் பரிணாம வளர்ச்சி வாழ்க்கையே நெறிப்படுத்துவது முறைப்படுத்துவது எல்லாம் ஆன்மீகம்தான் என்று கூறியிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=V1TkZYGexe0
வைக்கோ பற்றி சொன்னது:
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தம்பி ராமையா. இவர் பெரும்பாலும் படங்களில் காமெடியனாக தான் நடித்திருக்கிறார். அதோடு வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கிக் கொண்டு வருகிறார். மேலும் இவர் திரைப்படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனர், பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர்.

தம்பி ராமையா குறித்த தகவல்:
தற்போது இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இதற்கிடையில் இவருடைய மகன் உமாபதியும், நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து வந்தார்கள். பின் இருவீட்டாரும் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் நடைபெற்று இருந்தது. திருமணத்திற்கு பின் இருவரும் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.






