பிரபுதேவாவை அடுத்து கமல் நடித்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபுதேவாவின் சகோதரர்.

0
1896
kamal-prabu-deva
- Advertisement -

தமிழ் திரை உலகில் 1998 ஆம் ஆண்டு கமல்ஹாசன்– பிரபுதேவா இணைந்து நடித்த படம் “காதலா காதலா”. இந்த படத்தை சிங்கீதம் சீனிவாச ராவ் அவர்கள் இயக்கி உள்ளார். இந்த படத்தில் இவர்களுடன் சௌந்தர்யா, ரம்பா, வடிவேலு, நாகேஷ், எம் எஸ் விஸ்வநாதன், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், கோவை சரளா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் ஒரு நிமிடம் இடைவெளி கூட இல்லாமல் காமெடி காட்சிகள் நிறைந்து இருக்கும். ஒரு பொய் பல பொய்களை உருவாக்கும். அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தான் மையக்கதை. அதோடு முதன் முதலாக கமலஹாசனும், பிரபுதேவாவும் இந்த படத்தில் இணைந்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

நடிகர் பிரபுதேவா உடன் பிறந்தவர்கள் ராஜீ சுந்தரம், நாகேந்திர பிரசாத் என்பது அனைவரும். இவர்கள் இருவரும் நடிகர் பிரபு தேவாவை போல் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் தான். இவர்கள் மூவருமே நடனத்தில் பட்டையை கிளப்புவார்கள் என்று சொல்லலாம். இவர்கள் மூவரும் சினிமாவில் மிகப் பிரபலமான நடன இயக்குன ரான சுந்தரம் மாஸ்டரின் மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காதலா காதலா படத்தில் கமலஹாசனுடன், பிரபு தேவா இணைந்து நடித்தது போல் பார்த்தாலே பரவசம் படத்தில் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிக்க நடிகர் ராஜீ சுந்தரத்திற்கு வாய்ப்பு வந்தது. பின் அது சூழ்நிலை காரணமாக அதை அவர் தவற விட்டார்.

இதையும் பாருங்க : ஓவராக உடலை குறைத்ததால் கை மாறிய கீர்த்தி சுரேஷின் பாலிவுட் படம். வாய்ப்பை தட்டிய தமிழ் நடிகை.

- Advertisement -

ராஜூ சுந்தரம் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட இயக்குனர், நடன இயக்குனர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். மேலும், இவர் நடன இயக்குனராக இருந்தாலும் ஜீன்ஸ், ஐ லவ் யூ டா, ஒன் டூ த்ரீ போன்று பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். 2001 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளி வந்த தமிழ் பார்த்தாலே பரவசம் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்த படத்தில் மாதவன், சிம்ரன், சினேகா, ராகவா லாரன்ஸ், விவேக், நிழல்கள் ரவி, மணிவண்ணன் வடிவுக்கரசி, கமலஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

பார்த்தாலே பரவசம் படத்தில் கமல் நடித்த காட்சி.

இந்த படமும் முழுக்க முழுக்க நகைச்சுவை காதல் படமாக அமைந்தது. அதுமட்டும் இல்லாமல் இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான இந்த படம் 100வது படம் ஆகும். இந்த படத்தை கவிதாலாய அவர்கள் தயாரித்து இருந்தார்கள். இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து உள்ளார். இந்த பார்த்தாலே பரவசம் படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் ராஜீ சுந்தரம் நடிப்பதாக இருந்தது. கமலுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபுதேவாவின் சகோதரர்.

-விளம்பரம்-
Related image

திடீரென்று அவர் நடிக்கவில்லை அவருக்கு பதிலாக நடிகர் ராகவா லாரன்ஸ் இடம் பேசி ஒப்பந்தம் வாங்கினார்கள். இந்த படத்தில் ராஜீ சுந்தரம் மட்டும் நடித்து இருந்தால் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்து இருப்பார். நடிகர் ராஜீ சுந்தரம் அவர்கள் அந்த வாய்ப்பைத் தவறவிட்டார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், உலக நாயகன் கமலஹாசன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் நடிப்பதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement