அன்று இருடியம் மோசடி, தற்போது சாதி ரீதியாக வசை – சர்ச்சையில் சிக்கிய விக்னேஷ். வைரல் ஆடியோ விவகாரத்தில் நடந்தது என்ன?

0
1862
Vignesh
- Advertisement -

சம்பளம் கேட்டதற்கு நடிகர் விக்னேஷ் ஜாதியை சொல்லி திட்டினாரு என்ற விவகாரம் குறித்து உதவியாளர்
அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தற்போது நடிகர் விக்னேஷ் உதவியாளரிடம் ஜாதி ரீதியாக தரக்குறைவாக பேசி இருக்கும் ஆடியோ விவகாரம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் விக்னேஷ். இவர் 1992 ஆம் ஆண்டு வெளியான சின்னதாயி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விக்னேஷ் தன் உதவியாளரிடம் ஊதியம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அப்போது அவர் ஜாதி ரீதியாக தரை குறைவாக பேசியிருக்கிறார் என்று ஆடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த பலருமே விக்னேஷிற்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இது தொடர்பாக உதவியாளர் சுபாஷ் கூறியிருந்தது, என்னுடைய சொந்த ஊர் மதுரை.

- Advertisement -

சென்னைக்கு நான் வேலை தேடி வந்தேன். சீனியர் நடிகர்களுக்கு டச் அப் பாய் assistant ஆக வேலை பார்க்கிறேன். புது சீரியலுக்காக விக்னேஷ் சாரிடம் வேலைக்கு போனேன். இரண்டு நாட்கள் ஷூட்டிங். முதல் நாள் சம்பளம் 700 ரூபாய் கொடுத்தார். இரண்டாவது நாள் பாதி நாள் தான் சூட்டிங் போனேன். ஒருநாள் ஷூட்டிங் நாளும் அரை நாள் சூட்டிங்னாலும் எங்களுக்கு முழு சம்பளம் கொடுக்கணும். இது எல்லோருக்கும் நடக்கிற விஷயம் தான். அன்று எனக்கு 100 ரூபாய் கையில் கொடுத்துவிட்டு மீதி ஜிபே செய்கிறேன் என்று சொல்லிவிட்டார் சென்றுவிட்டார்.

அதற்கு பிறகு சந்திரமுகி 2 படத்துக்காக ஐந்து நாட்கள் ஷூட்டிங் கூட்டிட்டு போனாரு. ஆனால், பாதி சம்பளம் தான் போட்டுவிட்டார். மீதி சம்பளத்தை கொடுக்கிறேன் என்று சொன்னவர் கொடுக்கவில்லை. படத்தோட மேனேஜரிடம் கேளு என்று சொல்லிவிட்டார். அவரிடம் போய் கேட்டால் விக்னேஷ் கிட்ட கொடுத்துட்டேன்னு சொன்னார். தயாரிப்பு நிறுவனம் எங்களுக்கான சம்பளத்தை எப்போதும் எங்களிடம் நேரடியாக கொடுக்க மாட்டார்கள். நடிகர்கள் கிட்ட தான் கொடுப்பார்கள். இவருக்கு போன் பண்ணி சம்பளம் கேட்டேன். திரும்பவும் அதே பதிலை தான் சொன்னார். சரிங்க சார் சீரியலுக்கு போனா அன்னைக்கு பேலன்ஸ் இருந்ததே அதையாவது கொடுங்க சார் என்று சொன்னேன்

-விளம்பரம்-

அப்போதுதான் வாக்குவாதம் அதிகமாகி ஜாதி வெறியோடு என்னை இழிவு படுத்தி பேசினார். என் அம்மாவை இழுத்து அசிங்கமாக பேசினது மட்டுமில்லாமல் ஜாதி ரீதியாகவும் இழிவு படுத்தி ஆவேசமாக பேசினார். பின் 250 ரூபாய் தான் போட்டு விட்டார். அப்போ கூட முழு சம்பளத்தை கொடுக்கவில்லை. எனக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது. என்னோட அப்பா ஊரில் கூலி வேலைதான் பார்க்கிறார். வேலை தினமும் இருக்காது. நான் வேலைக்கு போய் தான் வீட்டுக்கு பணம் அனுப்புகிறேன். சென்னையில் ரூம் வாடகை, ஷூட்டிங் நடக்காத நேரங்களில் சாப்பாடு என்று எல்லா செலவும் எந்த அளவுக்கு இருக்கும் என்று எல்லோருக்குமே தெரிந்தது தான். அதுலயும் வயிற்றில் அடிக்கிற மாதிரி நடந்துக்கிட்டால் எப்படி? ஒரு நாள் சூட்டிங் என்றாலும் அரை நாள் சூட்டிங் என்றாலும் எங்களுக்கு ஒரு நாள் சம்பளத்தை பட தயாரிப்பு நிறுவனத்தின் மேனேஜர் கொடுத்து விடுவார்கள்.

அவர்களிடம் வாங்கிய அந்த சம்பளம் கூட எங்களுக்கு கொடுக்காமல் இந்த நடிகர் இப்படி ஏமாற்றலாமா? என்று மனவேதனையுடன் கூறியிருக்கிறார். பின் விக்னேஷ் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், அந்த ஆடியோவில் இருந்தது என்னுடைய குரல் இல்லை. அந்த குரலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. என்னிடம் வேறொரு உதவியாளர்கள் இருந்தார். பாதி நாள் ஊதியம் வாங்கிக் கொள் என்றேன். அவரும் சரி என்றார். பின்னர் எனக்கு முழு ஊதியம் வேண்டும் என அவர் போன் செய்து தொந்தரவு செய்தார். இவ்வளவு தான் நடந்தது. யாரோ அவர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள். நான் சொல்லாத வார்த்தையை சொல்லி காயப்படுத்தினேன் என்றெல்லாம் பேசுகிறார்கள். இதனால் நான் நிறைய மன உளைச்சல் சந்தித்திருக்கிறேன். கேமராமேன், வளர்ந்து வரும் உதவி இயக்குனர்களுக்கு என்னுடைய ஓட்டலில் இலவசமாக உணவு கொடுத்திருக்கிறேன். அதுவும் அந்த ஆடியோவில் நூறு கொடுக்கலை என்று சொல்கிறார்கள். நான் எப்படி ஜாதியாக பேசுவேன் என்று மறுப்பு தெரிவித்துக் கூறி இருக்கிறார்.

Advertisement