மார்கன் படத்தின் விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் இசையில் வந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ ‘ஹிட்லர்’ போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தற்போது விஜய் ஆண்டனி அவர்கள் 'சக்தி திருமுருகன்' என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனியே நடித்தும் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை அருண் பிரபு இயக்கி இருக்கிறார்.
விஜய் ஆண்டனி குறித்த தகவல்:
இந்த படத்திற்கான வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது. இதை அடுத்தடுத்து பல படங்களில் விஜய் ஆண்டனி கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மார்கன். இந்த படத்தை லியோ ஜான் பால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, பிரகிடா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது.

மார்கன் படம்:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்று இருந்தது. அதில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, நிறைய பேர் என்னிடம், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்கிறார்கள். நான் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை. நடிகர்கள் நாடாளக்கூடாது என்பது விதி கிடையாது. மக்கள் ஆதரவு இருந்தால் நாட்டை ஆளலாம்.
View this post on Instagram
விஜய் ஆண்டனி பேட்டி:
அதற்கான அறிவு என்னிடம் இல்லை. எனக்கு 50 வயது ஆகிவிட்டது. வட்டம், மாவட்டம் என அரசியல் பற்றி எதுவுமே தெரியாது. இன்னும் மக்களை பார்த்து சந்தித்து நிறைய புரிந்து கொள்ள வேண்டும். புகழ் இருக்கிறது என்பதற்காக அரசியலில் குதிக்க முடியாது. மார்கன் படத்தினுடைய இயக்குனர் இதற்கு முன்பு எடிட்டராக இருந்தார். ஒரு எடிட்டரை ஏன் இயக்குனராக மாற்றக்கூடாது என்று நினைத்து தான் வாய்ப்பு கொடுத்தேன். மார்கன் படம் நன்றாக வந்திருக்கிறது. அனைவருக்குமே பிடிக்கும்.
https://www.youtube.com/watch?v=MmAsqbK5lgY
படம் பற்றி சொன்னது:
மேலும், நான் இதற்கு முன்பே அண்ணாதுரை, காளி போன்ற கிராமப்புற கதைகளில் எல்லாம் நடித்தேன். எப்படி காந்தாரோ வந்ததோ அதேபோன்று ஒரு கிராமத்துக் கதையை பிரமாண்டமாக பான் இந்திய படமாக எடுக்க இருக்கிறேன். அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது. விரைவில் சூட்டிங் நடக்கும். இன்னும் டைட்டில் வைக்கவில்லை. முன்பெல்லாம் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் படம் பார்ப்பார்கள். ஆனால், இப்போது 20 லட்சம் பேர் ஒரே நாளில் படம் பார்க்கிறார்கள். அப்போது 100 நாட்கள் ஓடுகின்ற படங்கள் இப்போது அதிக அளவு திரையரங்களில் வெளியாகுவதால் 10 நாட்கள் ஓடினாலே பொருளாதார ரீதியாக வெற்றி தான் என்று கூறி இருக்கிறார்.






