சர்க்கார் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்.! சக நடிகரின் ஆசை..! எதிர்பாராத நேரத்தில் ஷாக் கொடுத்த விஜய்.!

0
480
Sarkar

தற்போது 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்த படத்திற்கான பாடல் காட்சிகள் அமெரிக்கா, லாஸ் வேகாஸ்ஸில் நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் போன்ற நடிகர் பட்டாளம் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகர் பிரேம் குமாரும் நடித்துள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.

vijay

சின்னத்திரை நடிகராக இருந்த பிரேம், இயக்குனர் சமுத்திர கனி இயக்கிய ‘அண்ணி’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் பல் படங்களில் துணை கதாபாத்திரத்திலும் ஒரு சில பங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது விஜய்யின் ‘சர்கார்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ‘சர்கார்’ படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் பிரேம் ‘விஜய் மிகவும் இயல்பானவர் மற்றவர்களுடன் மிகவும் எளிமையாக பழகுவார். இந்த படத்தில் நடித்த போது நான் ஒருமுறை உங்களோடு சேர்ந்து ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று விஜய்யிடம் கேட்டேன்.அதற்கு அவர் , ‘இப்போது எடுத்தால் ஃபர்ஸ்ட்லுக் கெட்டப் வெளியே வந்துவிடும்’ என்று கூறிவிட்டார்.

பின்னர் கடைசி நாள் படபிடிப்பின் போது நானே எதிர்பார்க்காத நேரத்தில் என்னை அழைத்து ‘வாங்க, பிரேம் போட்டோ எடுக்கலாம்’ என கூறினார். அதை கேட்டதும் எனக்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் பயங்கர ஷாக் ஆகிவிட்டேன்’ என்று தெரிவித்துள்ளார். தன்னுடன் நடிக்கும் சக கலைஞர்களை நடிகர் விஜய் எந்த அளவிற்கு மதிக்கிறார் என்பது இந்த சம்பவமும் ஒரு சான்று தான்.