பிக் பாஸ் அழைப்பை உதறிய நடிகை கஸ்தூரி …எனக்கு பிக் பாஸ் முக்கியமில்லை இதுதான் முக்கியம்..! – காரணம் இதுதான் ?

0
1159
- Advertisement -

விஜய் டிவியில் விரைவில் தொடங்கவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் ஒரு சில பிரபலங்களின் பட்டியல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. இதில் பிரபல நடிகை கஸ்தூரி கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் அந்த தகவலை முற்றிலும் அவர் மறுத்துள்ளார்.
actress-kasthuri

-விளம்பரம்-

அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் என்று எதிர்பார்க்கபடும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இம்முறையும் உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்க போவதாக ஏற்கனவே அறிவிப்பு வந்தது. மேலும் இந்த சீசனில் பல்வேறு நடிகர், நடிகைகள் கலந்து கொள்வார்கள் என்ற ஒரு தகவலும் வந்தது. ஆனால் தாம் இந்த பிக் பூஸ் தொடரில் கலந்து கொள்ள போவது இல்லை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

- Advertisement -

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி பதிவிட்டுள்ள கஸ்தூரி” இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி யாரும் தம்மை தொடர்பு கொள்ளவில்லை. மேலும் அப்படியே தொடர்பு கொண்டாலும் நான் வேண்டாம் என்று தான் கூறுவேன், எனக்கு சின்ன பாஸ் தான் முக்கியம் ” என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

நடிகை கஸ்தூரிக்கு திருமனாகி சன்கல்ப் என்ற மகனும் மற்றும் சோபினி என்ற மகளும் இருக்கிறார். தற்போது அவரது மகன் தற்போது தான் பள்ளி செல்லும் வயதில் இருக்கிறான் என்பதால் அவரால் அவரை விட்டு இருக்க முடியாது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் 100 நாட்கள் அவரது மகன் மட்டும் மகளை விட்டுத்தான் இருக்க வேண்டும் இதனால் தான் அந்த நிகழ்ச்சிக்கு நோ சொல்லி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

English Overview:
Actress Kasthuri said that she is not going to participate in Bigg Boss 2 and no body had invited her to that show also. If they invite also she is not willing to participate in that show. To get the Bigg Boss official news and daily activities in Bigg boss house and to save your elimination list participants just vist “Bigg Boss vote Tamil” link.

Advertisement