அனைவரின் வாயை மூடிய சிம்பு.! பிரபல முன்னணி இயக்குனருடன் அடுத்த படம்.! “Lyca Production” அதிகாரப்பூர்வ தகவல்.!

0
608
Simbu-Actor
- Advertisement -

கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார் நடிகர் சிம்பு. தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். அதுபோக முதன் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் வெங்கட் பிரபுவிற்கு அடுத்து இயக்குனர் சுந்தர் சியின் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

Simbu

- Advertisement -

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு, இயக்குனர் சுந்தர் சி கூட்டணியில் படம் ஒன்று எடுக்கப்படவுள்ளது உறுதியாகியுள்ளது. அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த தகவலை லைகா நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, தனது ட்விட்டர் பக்கத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த ‘அத்தாரிண்டிகி தாரேதி’ என்ற படத்தின் தெலுகு ரிமேக் உரிமையை வங்கியுள்ளதாக லைகா நிறுவனம் பதிவிட்டிருந்தது. இந்நிலையில் அந்த படத்தின் தமிழ் ரிமேக்கில் சிம்பு நடிக்கும் படத்தை தான் சுந்தர் சி இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

கடந்த 2013 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘அத்தாரிண்டிகி தாரேதி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற தனது அத்தையை எவ்வாறு தனது தாத்தாவிடம்,பவன் கல்யாண் எப்படி சேர்கிறார் என்பது தான் கதை. இந்த படம் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட்டடைந்ததோடு பல விருதுகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement