திருமண வரவேற்பில் ஏற்பட்ட சோகம்.! காயத்துடன் வீடு திரும்பிய விஜய்..!

0
229

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடந்த திருமண வரவேற்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய்க்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

vijay actor

நடிகர் விஜய்யின், விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் என்பவரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (செப்டம்பர் 14) மாலை பாண்டிச்சேரியில் உள்ள சங்கமித்ரா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த திருமண விழாவிற்கு நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவும் சென்றிருந்தனர். நடிகர் விஜய்யின் வருகையை அறிந்து திருமண மண்டபத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஏராளமான ரசிகர்களுக்கு இடையை நடிகர் விஜய் மணமக்களுக்கு பரசிளித்து விட்டு திரும்பினார்.

actor vijay

விஜய் திருமண மண்டபத்தில் இருந்து வெளியே வருவதற்குள் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி நடிகர் விஜய்யின் காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பௌன்சர்கள் உதவியோடு நடிகர் விஜய் ஒருவழியாக வெளியே அனுப்பி வைக்கபட்டார். கூட்டத்தை கலைக்க திருமண மண்டபத்திற்கு வெளியே போலிசார் தடியடி நடத்தினர். இதில் மண்டபத்தில் இருந்த சில பொருட்களும் சேதாரமானது.