‘இன்னிக்கி சொல்றேன், எங்க அண்ணன் பெயர’ – சர்வைவரில் விஜய் குறித்து பேசிய விக்ராந்த்.

0
38658
vikranth
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக விக்ராந்த் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் 2005ஆம் ஆண்டு வெளிவந்த கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நினைத்து நினைத்து பார்த்தேன், நெஞ்சத்தைக் கிள்ளாதே, கோரிப்பாளையம், பாண்டியநாடு, தாக்க தாக்க, பக்ரீத் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். இருந்தாலும் விக்ராந்த் அவர்கள் தன் அண்ணனை போல் சினிமாவில் கொடி கட்டி பறக்க முடியவில்லை. விக்ராந்த் அண்ணன் வேற யாரும் இல்லைங்க நம்ம தளபதி விஜய் தான். விஜய்யின் அம்மா சோபாவும், விக்ராந்த் அம்மா ஷீலாவும் அக்கா தங்கைகள்.

-விளம்பரம்-

விக்ராந்த் அவர்களின் பெரியம்மா மகன் தான் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலாஅவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் லக்ஷ்மி அம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் இவருடைய கதாபாத்திரம் முடிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது விக்ராந்த் அவர்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இதையும் பாருங்க : ஸ்கூல்ல நான் கத்துகிட்ட முதல் பாடம் இதான் – சமந்தாவை சூசகமாக கலாய்த்து முன்னாள் காதலர் சித்தார்த் போட்ட பதிவ பாருங்க.

- Advertisement -

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சி சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறார்கள். ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சர்வைவர். நடிகர் அர்ஜுன் தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே போட்டியாளர்களுக்குள் மோதலும், சர்ச்சைகளும், சலசலப்புகளும் தொடங்கிவிட்டது.

Rare photo of Vijay shared by Vikranth

அதோடு போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை குறித்து பல்வேறு விதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமுக்கும் விக்ராந்த்க்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு உள்ளது. அது குறித்து ப்ரோமோ கூட தற்போது வெளியாகியுள்ளது. அதில் அர்ஜுன் அவர்கள் இன்று டிரைபள் பஞ்சாயத்து என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு விக்ராந்த் அவர்கள் கூறியது, ராம் சொல்லுகிறார் நாங்களெல்லாம் சினிமா பின்னணியில் இருந்து வந்திருக்கிறோம். உங்களுக்கு சினிமா பாக்ரௌண்ட் அதிகமாக இருப்பதால் உங்களுக்கு எந்த பிரச்சனை இல்லை என்று சொல்லி இருக்கிறார். உண்மையைச் சொல்லப்போனால் என்னுடைய அண்ணன் விஜய் பெயரை சொல்லி நான் இதுவரை ஒரு டிக்கெட் கூட கேட்டது கிடையாது. அவருடைய பெயரை நான் எங்கேயும் பயன்படுத்தியதும் கிடையாது என்று கூறி இருக்கிறார். இப்படி விக்ராந்த் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement