கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியா ஹாட் டாபிக்கே சிஎம் விஜய் தான். இவர் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த தேர்தலில் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவித்திருந்தார்கள். பின் தேர்தலின் முடிவில் எல்லா கட்சியையும் தவெக கட்சி கதி கலங்க வைத்தது. தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் தவெக கட்சி இருந்தது. இதை அடுத்து பெரும்பான்மையாக எம் எல் ஏக்கள் பெற்று விஜய் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

பதவி ஏற்றவுடன் விஜய் அவர்கள் செம மாஸாக பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார். மேலும், விஜய் அவர்கள் பதவி ஏற்ற பின் மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்று இருந்தார்கள். ஒவ்வொரு நாளுக்கு முதல்வர் அவர்கள் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்து கொண்டு வருகிறார். அதிலும் இவர் துவங்கிய சிங்கப்பெண்ணே அதிரடி படை மாஸாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய் அவர்கள் முதல்வர் ஆனதிலிருந்தே திரை பிரபலங்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் அரசியல்:
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பார்த்திபன், அர்ஜூன், சிம்பு, சினேகா பிரசன்னா, சிபி, பாக்யராஜ், சிம்ரன் உட்பட பல பிரபலங்கள் நேரில் சந்தித்து முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் விஷாலும் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் முதல்வர் விஜய்யை சந்தித்தபோது விலைமதிப்பற்ற பரிசு ஒன்றை விஷால் அவர்கள் கொடுத்திருந்தது தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

விஷால் கொடுத்த பரிசு:
அதாவது விஷால் அவர்கள் பல ஆண்டுகளாக தேவி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல ஏழை மாணவ மாணவிகளை உயர்கல்விக்கு உதவி செய்து வருகிறார். அதோடு தான் நடக்கும் நிகழ்ச்சி மற்றும் மற்றவர்களை சந்திக்கும் போதும் விஷால் அவர்கள் பொன்னாடை, பூங்கத்து கொடுப்பதை தவிர்த்து அதற்கு மாறாக சம்பந்தப்பட்டவர்களுடைய பெயரில் ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

நெகிழ்ச்சியில் விஜய்:
அந்த வகையில் இன்று முதல்வரை நேரில் சந்தித்தபோது நடிகர் விஷால் அவர்கள் அவருடைய பெயரில் மூன்று ஏழை மாணவர்களுடைய உயர்கல்விக்கு உதவி செய்ததாக அறிவித்திருக்கிறார். நடிகர் விஷாலின் இந்த விலைமதிப்பற்ற பரிசை முதல்வரும் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டு நன்றியை தெரிவித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் முதல்வர், உங்களுடைய சேவை முயற்சி மென்மேலும் தொடர வேண்டும் என்றும் வாழ்த்தி இருக்கிறார். தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது






