கடவுளுடன் ஒப்பிட்டு மாதவிடாய் மீமை பகிர்ந்த விஷ்ணு விஷால் காதலி – திட்டி தீர்த்த நபர்.

0
2262

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

நடிகர் விஷ்ணு விஷால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுஇருந்தார். மேலும், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் இதுகுறித்து பேட்டி அளித்த ஜுவாலா, ஆம் நாங்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம் முன்பே சொன்னது போல இதில் மறைக்க எதுவுமே கிடையாது.

- Advertisement -

விரைவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் திருமண தேதி முடிவு அல்லது இதுகுறித்து ஏற்பாடுகள் நடந்தாலும் நாங்கள் விரைவில் அறிவிப்போம் என்று கூறி இருந்தார். ஜுவாலா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார் . அதில் மாதவிடாய் மிகவும் கூலானது என்று குறிப்பிட்டு கடவுளின் கையில் இருக்கும் கொடியில் சானிட்டரி பேட்டும் இருந்தது.

இப்படி ஒரு மீமை ஜுவாலா பகிர, ரசிகர் ஒருவர் ஜுவாலாவை ஆபாசமாக திட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார். அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஜுவாலா, இதுபோன்ற மக்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். சமூக வலைதளத்தில்இப்படி பேசும் மனிதர்கள் வெளியுலகில் என்ன வன்முறையை வேண்டுமானாலும் செய்வார்கள் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement