அந்த தகவல்கள் முற்றிலும் தவறு, சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்த நடிகர் யோகி பாபு

0
247
- Advertisement -

கார் விபத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பாக யோகி பாபு கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் யோகி பாபு. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் யோகிபாபுவின் கார் விபத்தில் சிக்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

அதாவது, இன்று காலை சென்னையில் இருந்து பெங்களூருக்கு சூட்டிங்கிற்காக யோகி பாபு தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேலூர் அருகே வாலாஜாபேட்டையின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக யோகி பாபுவின் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள டிவைடரில் மோதி இருக்கிறது. இந்த காரில் நடிகர் யோகிபாபு உடன் சில பேர் பயணம் செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

யோகிபாபு கார் விபத்து:

நல்லபடியாக இந்த விபத்தில் யோகி பாபு மற்றும் அவருடன் பயணம் செய்தவர்கள் யாருக்குமே காயம் ஏற்படவில்லை. இதை அடுத்து வேறொரு காரை வரவைத்து அங்கிருந்து யோகி பாபு பெங்களூரு கிளம்பி சென்றிருக்கிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சரி செய்து இருக்கிறார்கள்.

யோகி பாபு பேட்டி:

தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த விபத்து தொடர்பாக நடிகர் யோகி பாபு அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், எனக்கு எந்த விபத்துமே நடக்கவில்லை. நான் நலமாக தான் இருக்கிறேன். தற்போது நான் ஒரு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். அந்த படப்பிடிப்புக்காக வந்திருந்த ஒரு கார் தான் விபத்தில் சிக்கியது. அந்த காரில் நானும் என் உதவியாளரும் பயணம் செய்யவில்லை.

-விளம்பரம்-

யோகி பாபு கொடுத்த விளக்கம்:

மேலும், நானும் என் உதவியாளரும் அந்த காரில் சென்று விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாக தவறான தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. அது முற்றிலுமே பொய். எனக்கு எந்த விபத்துமே நடக்கவில்லை. இந்த தகவல் அறிந்து என்னுடைய நண்பர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகிறார்கள். என் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் இந்த சமயத்தில் என் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

யோகிபாபு குறித்த தகவல்:

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களின் பட்டியலில் யோகி பாபு பெயர் தான் முதல் இடத்தில் இருக்கும். இவர் ரஜினி, அஜித், விஜய் என பல தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

Advertisement