யோகி பாபு கூட அப்படி நடிக்க முடியாது..! பயங்கரமா சிரிச்ச விஜய்..மானத்த வாங்குறானு சொன்ன அம்மா

0
1280
yogi babu actor
- Advertisement -

“ ‘கோலமாவு கோகிலா’ பாட்டு யூடியூப்ல முதல் இடத்துல இருக்குனு எல்லோரும் சொல்றாங்க, கேட்கவே சந்தோஷமா இருக்கு. இதுக்கெல்லாம் காரணம், இயக்குநர் நெல்சன் சார்தான். அவர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே நான் செஞ்சேன்!” – கோலமாவு கோகிலா படத்தின் ‘கல்யாண வயசு’ பாடல் டிரெண்டில் இடம்பிடித்த குஷியில் பேசத் தொடங்கினார், நடிகர் யோகிபாபு.

kolamaavu kokila

- Advertisement -

`இந்தப் படத்துல நயன்தாராவை ஒன் சைடா லவ் பண்ற மளிகைக் கடை ஓனரா நடிச்சிருக்கேன். எப்போ பார்த்தாலும், நயன்தாரா மேடமை சைட் அடிச்சுக்கிட்டே இருப்பேன். அவங்ககூட இப்படியொரு காதல் பாட்டு எனக்குக் கிடைச்சது கிஃப்ட்டுதான்! ரொம்ப லக்கியா ஃபீல் பண்றேன். இந்தப் படத்தோட ஷூட்டிங் முடிச்சிட்டோம். கொஞ்சநாள் கழிச்சு டைரக்டர் நெல்சன் சார் எனக்கு போன் பண்ணி, ‘தலைவா, பாட்டு ஒண்ணு பிளான் பண்ணியிருக்கோம். சிவகார்த்திகேயன் சார் எழுதுறார். அனிருத் சார்தான் மியூசிக் பண்ணி பாடுறார். அந்தப் பாட்டை ரெடி பண்ணா சூப்பரா இருக்கும்னு சொன்னார். உங்க ஐடியாபடியே பண்ணுங்கனு நானும் சொல்லிட்டேன். அப்படி ரெடியானதுதான், அந்தப் பாட்டு!

ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போறவரை இந்தப் பாட்டுல நான் நயன்தாரா மேடம்கூட நடிக்கப்போறேன்னு எனக்குத் தெரியாது. ஸ்பாட்டுக்குப் போன எனக்கு அதிர்ச்சி, ஆச்சர்யம்தான். பாட்டோட முதல் ஷாட் எடுக்கும்போதே நெல்சன் சார்கிட்ட சொல்லிட்டேன், ‘விஜய், அஜித்னு பெரிய ஸ்டார்ஸ்கூட நடிச்சவங்க, நயன்தாரா மேடம். அவங்ககூட ரொமான்ஸ் பாட்டு பண்றது காமெடியா இருக்கு!’னு சொன்னேன். அவர் அதுக்கு, “காமெடியாதான் இருக்கும். ஏன்னா, பாட்டே காமெடியான பாட்டுதான். நீங்க ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க’னு சொல்லிட்டார்.

-விளம்பரம்-

nayanthara

இதையே நயன்தாரா மேடம்கிட்டேயும் சொன்னேன், சிரிச்சாங்க. ‘ஒன்சைட் லவ்வர் எவ்வளவு சின்சியரா லவ் பண்ணுவாரோ, அதையே நீங்க கொஞ்சம் சீரியஸா நினைச்சுக்கிட்டு லவ் பண்ணுங்க’னு சொன்னார், நெல்சன். முக்கியமா, ‘யாரடி நீ மோகினி’ படத்துல தனுஷ் சார் எப்படி நயன்தாரா பின்னாடி ஒன்சைட் லவ்வுல சுத்திக்கிட்டு பாடுனாரோ, அப்படி இருக்கணும்னும் சொன்னார். நானும் பண்ணிட்டேன்.

நெல்சன் சார் செம அறிவாளி. சின்னச்சின்ன விஷயங்கள்கூட ரொம்ப கேஷுவலா பண்ணச் சொல்லிக்கொடுத்தார். அவர்கிட்ட இருந்து ஐடியா கொட்டிக்கிட்டே இருந்துச்சு. பாட்டோட ஷூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் ஒருநாள் ராத்திரி, முழு பாட்டையும் எனக்கு அனுப்பி வெச்சார். எனக்கே ஒருமாதிரி இருந்துச்சு. என்னப்பா இது… நம்மளா இவ்வளவு அழகா நடிச்சிருக்கோம்னு. சிவகார்த்திகேயன், அனிருத் சார் இவங்க ரெண்டுபேர்கிட்டேயும் இன்னும் நான் பேசலை. நேர்ல பார்த்து என் அன்பை அவங்ககிட்ட வெளிப்படுத்தணும்னு இருக்கேன்.

விஜய் சார்கூட ஷூட்டிங் போயிட்டு இருக்கு. நேத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சார்கிட்ட இந்தப் பாட்டைக் காட்டினேன். பயங்கரமா என்ஜாய் பண்ணிச் சிரிச்சார். ‘யோகி, இந்தப் பாட்டு பெரிய ஹிட் ஆகும். ரொம்ப சூப்பர்’னு சொன்னார். பாட்டை ரொம்பவே பாராட்டினார்.
இதுக்கெல்லாம் நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் இவங்க மூணுபேரும்தான் காரணம். நயன்தாரா மேடமுக்கு பெரிய நன்றி சொல்லணும். ஏன்னா, பெரிய நடிகை காமெடி நடிகர்கூட இப்படியொரு பாட்டுல நடிக்கிறது பெரிய விஷயம். ஏன்னா, இதுக்கு முன்னாடி ஒரு தடவை, ஒரு படத்துல பஸ்ல ஒரு மான்டேஜ் பாட்டு எடுத்தாங்க. படத்தோட ஹீரோயின் என் தோள்மேல சாயச் சொல்லி ஒரு சீன் எடுக்கணும்னு டைரக்டர் நினைச்சார். ஆனா, அந்த நடிகை, “பண்ணமாட்டேன், என் சினிமா கரியர் என்ன ஆகுறது?’னு மறுத்துட்டாங்க. டைரக்டர் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அந்த நடிகை கேட்கவே இல்லை.

yogi babu

ஆனா, நயன்தாரா மேடம் எவ்வளவு பெரிய நடிகை. அவங்க இன்னும் பெரிய நடிகையா வருவாங்க. நூறு வருடத்துக்கு நல்லாயிருப்பாங்க. ஏன்னா, நயன் மேடம் என்னைக் காமெடி நடிகரா மட்டும் பார்க்காம, சக நடிகரா நினைச்சு என்கூட நடிச்சாங்க. அவங்க மென்மேலும் வளருவாங்க. இந்தப் பாட்டை பார்த்துட்டு வீட்டுல அம்மா, ‘முதல்ல உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்டா… இப்படிப் பாட்டு பாடி மானத்தை வாங்கிட்டு இருக்க’னு சொன்னாங்க. ஆனா, நான் ரொம்ப நல்ல பையன். இதுவரைக்கும் நான் எந்தப் பொண்ணு பின்னாடியும் அலைஞ்சது கிடையாது.

நயன்தாரா மேடம்கூட ஒரு பாட்டுல நடிச்சிருக்கேன். விஜய், அஜித் சாரோட படங்கள்ல நடிக்கிறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. அஜித் சார்கூட நாலு நாள் ஷூட்டிங் முடிச்சுட்டு இப்போதான் வந்தேன். அடிக்கிற வெளியிலுக்கு கேரவன்ல போய் உட்காராம, ஷூட்டிங் ஸ்பாட்ல ‘யோகிபாபு வாங்க இங்கே…’னு என்கூட உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கார், அஜித் சார். ரொம்ப நல்ல மனிதர். அடுத்த ஷெட்யூல்ல இந்தப் பாட்டை அவர்கிட்டேயும் காட்டணும். சினிமாவுல எனக்காக இடம் நல்லபடியா அமைஞ்சிருக்கு. எல்லாத்துக்கும் காரணமான ரசிகர்களுக்குப் பெரிய நன்றி!” – சந்தோஷமாக முடித்தார், யோகிபாபு.

Advertisement