விஜயை தொட்டெல்லாம் நடிக்காதீங்கன்னு சொன்னாங்க, ஆனால், அஜித் – இருவருடனும் நடித்த பிரபல நடிகர் பேட்டி.

0
4769
Vijay-ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் யுகேந்திரனும் ஒருவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் இதுவரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அதிலும் இவர் சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் என்பது குறிபிடத்தக்கது. இவர் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் தளபதி விஜயுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் யுகேந்திரன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் விஜய், அஜித் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பது, முதலில் நான் அனைவரையும் போல விஜய் ஒரு பந்தா காட்டுபவர் என்று நினைத்துக் கொண்டேன். மேலும், ஷூட்டிங்கின் போது அவரை தொட்டு நடிக்காதீங்கன்னு சிலர் சொன்னாங்க. ஆனால், விஜய் அந்த மாதிரி கிடையாது என்று அதற்குப் பிறகு தான் தெரிந்தது. அவருடன் கூட இருந்தவர்கள் தான் அவரைத் தொடக்கூடாத, இப்படி பண்ண கூடாது என்று நிறைய ரூல்ஸ் போடுவார்கள்.

- Advertisement -

ஆனால், அவர் அந்த மாதிரி இல்லை என்பது அவருடன் நடிக்க போது தான் தெரிந்தது. விஜய் எல்லோருடனும் நண்பர்களாக பழகுவார். பெஸ்ட் ஹீரோ என்று சொன்னால் விஜய் தான். சண்டை காட்சிகள் எல்லாம் ஓர் அடி கூட மற்றவர்கள் மேல் விழாது. அந்த அளவிற்கு கவனமாக சண்டை போடுவார். விஜய் சண்டைக் காட்சியிலும், நடனத்தையும் யாராலும் அடித்துக்கொள்ள முடியாது. ஆனால், அதற்கு நேர் ஆப்போசிட் தல. தல நம்முடைய வாழ்க்கையை நம்ப தான் வாழவேண்டும் என்று சொல்வார். நீ எப்போதும் ஜாலியாகவே இரு. உங்களுடைய வாழ்க்கையை நீங்க தான் வாழனும். எதைப் பற்றியும் யோசிக்காதீர்கள்.

நான் யார் வந்தாலும் எழுந்து நிற்பேன். மரியாதைக்காக எழுந்து நிற்பதை பார்த்து தல ஏன் நிற்கிறீர்கள். மரியாதை மனதில் இருந்தால் போதும் என்று சொல்வார். யாரிடமும் எதிர்பார்ப்புகளை உருவாக்காதீர்கள் என்று கூறுவார். இவர் ஒரு ஸ்டைல், விஜய் ஒரு ஸ்டைல். ரெண்டு பேருமே வேற வேற மாதிரி. ரெண்டு பேருடன் நடிக்கும்போது நல்ல அனுபவங்கள் கிடைத்தது. நான் ரொம்ப வியந்த மனிதர் என்று சொன்னால் அஜித்தை சொல்லலாம். அஜித் பார்க்க கொஞ்சம் டெரராக தெரியும். ஆனால், அவர் ரொம்ப சாஃப்ட். அவர் எல்லாமே வெளிப்படையாக பேசுவார் என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement