பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் பூகம்பமாகவெடித்தது . கவின் விஷயத்தில் லாஸ்லியா நடந்து கொண்ட விதத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை, இதற்காகவா உன்னை அனுப்பினேன். என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்துவிட்டாய் என்று கடுமையாக பேசி இருந்தார்.லாஸ்லியாவின் தந்தை ,மட்டுமல்ல லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கூட, கவினிடம் நீ பழகுவதை நிறுத்து உன்னுடைய விளையாட்டை நீ விளையாடு என்று அறிவுறுத்தினார்.
இதனால் கவினும் மனம் வருத்தப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். இருப்பினும் இறுதியில் வீட்டை விட்டு செல்லும் முன்னர் கவினை கட்டி அணைத்து எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் உன் கேமை விளையாடுங்க என்று கூறினார் லாஸ்லியாவின் தந்தை. இந்த நிலையில் இன்று தந்தையர் தினத்தில் தனது தந்தைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தந்தையர் தினத்தில் மட்டும் நமது தந்தைக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டுமா என்று நினைப்போம். அவர்கள் நாம் வாழ்த்து தெரிவித்தால் அவர்கள் சந்தோச படுவார்கள். நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஆண்டு என் தந்தைக்கு வாழ்த்து தெரிவிக்க வில்லை. பின்னர் அவரே எனக்கு போன் செய்து என் எனக்கு யாருமே வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேட்டார். அவர் எனக்காக பல கஷ்டங்களை தாங்கி கொண்டு இருக்கிறார்.
https://www.instagram.com/p/CBp8pn-JyU8CWPESbjXfZUVV6gSc3jk8YEzpcY0
அவர் கனடாவில் இருந்தாலும் அவருடைய சம்பாத்தியம் மிக குறைவு தான். ஆனால், மாச மாசம் எனக்கு செலவுக்கு காஸ் கொடுப்பார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு ஆன செலவை அவர் தான் பார்த்துக்கொண்டு இருந்தார். அதே போல அவர் எனக்காக பல தியாகங்களை செய்து உள்ளார். அவருக்கு நான் இப்போது செய்யும் வேலை கூட புடிக்கவில்லை. ஆனால், என்மேல வைத்திருக்கும் பாசத்திற்காக அவர் என்னை சப்போர்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறார்.