தனுஷ்,அமலா பால் உட்பட 14 நடிகர்கள் மீது நடவடிக்கை? தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் முடிவு என்ன?

0
1008
Dhanush
- Advertisement -

தனுஷ் உட்பட 14 நடிகர்கள் மீதும் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க போகும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் சங்க தலைவர் முரளி ராமசாமி, துணைத்தலைவர்கள் தமிழ்க்குமரன், தலைவர் கல்பாத்தி உட்பட 400 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்களின் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதில், தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கி கொண்டு படப்பிடிப்பு, டப்பிங் வேலையில் தொடர்ந்து பிரச்சினை தந்து வரும் ஐந்து நடிகர்களை வைத்து படம் தொடங்குவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்பு கொண்டு ஒப்பந்தம் செய்ய பிறகு தொடங்க வேண்டும் என்றும் தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

ஒத்துழைப்பு தராத நடிகர்கள்:

அது மட்டும் இல்லாமல் அந்த நடிகர்களுடைய பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். மேலும், இதில் முதல் கட்டமாக சிம்பு, விஷால், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, அதர்வா ஆகிய ஐந்து நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று முடிவு எடுத்திருந்தார்கள். இது குறித்த தகவலும் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில்
அந்த பட்டியலில் தற்போது 14 பிரபலங்களின் பெயர் இணைக்கப்பட்டு இருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட பட்டியல்:

அதில் தனுஷ், அமலா பால், லட்சுமி ராய் உட்பட பலபேர் இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இந்த 14 பேரிடமும் நடிகர் சங்க நிர்வாகிகள் விளக்கம் கேட்டு ஒரு வாரத்திற்குள் பதில் அளிப்பதாகவும் கூறி இருக்கின்றனர். மேலும், தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்பட்ட முடிவில் நடிகர், நடிகைகள் வைக்கும் தனியார் பாதுகாவலர்களுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் வழங்க முடியாது. அவர்களுக்கு சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளே தங்களுடைய சம்பளத்திலிருந்து ஊதியம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நடிகை-நடிகருக்கு போட்ட விதிமுறை:

அது மட்டுமில்லாமல் நடிகர் நடிகையின் மேக்கப் பெண் உள்ளிட்ட உதவியாளர்கள் பெப்சியில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் சம்பளம் வழங்கப்படும். வெளியில் இருந்து உதவியாளர்களை அழைத்து வந்தால் கொடுக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். மேலும், நடிகர் நடிகைகளுக்கு சம்பளம் வழங்குவதிலும் புதிய கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

நடிகர் நடிகைகள் சம்பளம் விதி:

அதில் ஒரு படத்திற்கு ஒப்பந்தம் ஆகும்போது நடிகர் நடிகைகளுக்கு 10% மட்டுமே முன் தொகை வழங்கப்படும். அடுத்ததாக படப்பிடிப்பில் இருந்து டப்பிங் வரை செல்லும்போது 60% கொடுக்கப்படும். இறுதியாக படத்தின் வெளியிட்டு இருக்கும் முன்பு 30% வழக்கப்படும் என்று கூறி இருக்கிறார்கள். இதனை அடுத்து நடிகர் சங்க நிர்வாகிகள் நடிகர்களுடன் பேசிவிட்டு பதில் அளிப்பதாக கூறியிருக்கின்றனர்.

Advertisement