தான்யா – பாலாஜி மோகன் குறித்து அவதூறு – வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவு.

0
2321
- Advertisement -

தான்யா- பாலாஜி மோகன் மீது தொடரப்பட்ட வழக்கு குறித்து நீதிமன்றம் கொடுத்திருக்கும் உத்தரவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பாலாஜி மோகன். இவர் சித்தார்த், அமலாபால் நடிப்பில் வெளியாகியிருந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இதனை அடுத்து இவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியிருந்த வாயை மூடி பேசவும் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து இவர் தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகியிருந்த மாரி படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. இதனை அடுத்து இவர் தனுஷ்- சாய்பல்லவி வைத்து மாரி 2 என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

இப்படி இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தது. இதனை அடுத்து இவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா படத்தை தயாரித்திருந்தார்.இந்த படம் தேசிய விருதை கூட பெற்றிருந்தது. இந்த நிலையில் பாலாஜி மோகன் மீது வழக்கு தொடரப்பட்ட சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, பாலாஜி மோகன் அவர்கள் 2012 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் படத்தை இயக்கும் போது அருணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டார்கள். இந்த நிலையில் பாலாஜி மோகன், நடிகை தான்யா பாலகிருஷ்ணாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்று தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் சோசியல் மீடியாவில் விமர்சித்து பதிவு போட்டிருந்தார்.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து பாலாஜி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், எனக்கும், தான்யா பாலகிருஷ்ணனுக்கும் திருமணம் நடந்தது தனிப்பட்ட விஷயம். ஆனால், நடிகை கல்பிகா எங்களை பற்றி அவதூறாக பேசி வருகிறார். ஏற்கனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். இருந்தாலும், தொடர்ந்து அவர் எங்களை குறித்து அவதூறாகவே பேசி வருகிறார். இதைத்தொடர்ந்து அவதூறாக பேச கல்பிகா கணேசுக்கு நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது.

அதுமட்டுமில்லாமல் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது கல்பிகா கணேஷ் தரப்பில் ஆஜனாக வழக்கறிஞர், தான்யா குறித்து போட்ட பதிவுகளை எல்லாம் கல்பிகா நீக்கிவிட்டார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்டு வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார். ஆகவே இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். இதனை அடுத்து நீதிபதி, கல்பிகா மன்னிப்பு கேட்ட வீடியோவை நீக்க கூடாது என்று இந்த வழக்கை முடித்து இருக்கிறார்.

Advertisement