நிலவில் தடம் பதித்த இந்தியா – மாதவன் முதல் குஷ்பூ வரை மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரபலங்கள்.

0
1643
- Advertisement -

சந்திராயன்- 3 நிலவில் தரை இறங்கியதை குறித்து இந்தியா முழுவதும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் பதிவு தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது இந்தியா முழுவதுமே சந்தோஷத்தில் கொண்டாடி வருகிறது. அதற்கு காரணம், சந்திராயன் 3 விண்கலம் தான். ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் நிலவிற்கு ஏவப்பட்டது.

-விளம்பரம்-

இது சுமார் 40 நாள் பயணம் என்றே சொல்லலாம். நிலவின் தென் துருவத்தில் இன்று சந்திராயன் 3 விண்கலம் தரையிறங்கி இருக்கிறது. இது இந்தியா செய்திருக்கும் மிகப்பெரிய சாதனை என்று சொல்லலாம். இன்று மாலை 6.04 மணி அளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கப்பட்டது. இதனை இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி செய்திருக்கிறார். மேலும், நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா செய்திருக்கிறது.

- Advertisement -

இது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம். இந்த நிகழ்வை தற்போது நாடே சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து பிரபலங்கள் பலரும் சந்தோஷத்தோடும் பெருமையோடும் இஸ்ரோவின் சாதனைக்கு வாழ்த்து கூறி பாராட்டி பதிவுகளை போட்டு பதிவிட்டு வருகிறார்கள்.

குஷ்பூ பதிவு:

எனது டிபியில் இந்த படம் இருக்கும். ஒரு இந்தியனாக, இந்த படம் ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் என்றென்றும் பதிந்து இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

மாதவன் பதிவு:

இந்த சாதனையை விவரிக்க வார்த்தைகள் போதாது ஜெய் ஹிந்த். என் இதயம் பெருமிதம் கொள்கிறது. நான் புத்திசாலித்தனமாக இருக்க முடியும் என்று நம்புகிறேன் என்று கூறி இருக்கிறார்.

அல்லு அர்ஜுன் பதிவு:

வாழ்த்துக்கள் இஸ்ரோ. விண்வெளி ஆய்வில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தருணம்! சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தைத் தொட்டது, இந்த குறிப்பிடத்தக்க சாதனையை எட்டிய முதல் நாடாக இந்தியாவை உருவாக்கியது! ஜெய்ஹிந்த்.

ரவி தேஜா பதிவு:

வாழ்த்துக்கள் இஸ்ரோ. சந்திராயன் 3 இன் வெற்றிகரமான மென்மையான தரையிறக்கத்தின் மூலம் இந்தியாவின் விண்வெளி பயணத்தில் மற்றொரு புகழ்பெற்ற அத்தியாயத்தை எட்டியுள்ளது. உங்களின் புத்திசாலித்தனமும் அயராத முயற்சிகளும் நம் தேசத்தின் நம்பிக்கை மற்றும் பெருமையின் கலங்கரை விளக்கமாக பிரகாசிக்கின்றன என்று கூறி இருக்கிறார்.

சிம்பு பதிவு:

பெரிய வாழ்த்துக்கள் இஸ்ரோ நிலவில் சந்திரயான்3 வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த நாள் ஒவ்வொரு இந்தியனுக்கும் வரலாற்று சிறப்புமிக்கது, நட்சத்திரங்கள், சந்திரன் மற்றும் அதற்கு அப்பால் நாம் அடைய முடியும் என்ற பெருமை மற்றும் நம்பிக்கையின் தருணம்.

நடிகர் ஷாருகான் பதிவு:

அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும்… இந்தியாவைப் பெருமைப்படுத்திய ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள். சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் மென்மையாக தரையிறங்கியது.

நடிகை காஜல் அகர்வால் பதிவு:

சந்திரயான்-3 இன் வரவிருக்கும் சந்திர ரோவர், நமது தேசிய சின்னமான சாரநாத்திலிருந்து அசோகரின் சிங்க தலைநகரான சந்திர மேற்பரப்பில் இஸ்ரோவுடன் இணைந்து அதன் அடையாளத்தை விட்டுச்செல்லும். இந்தியாவின் சந்திர மரபு மற்றும் இருப்பை அடையாளப்படுத்தும் ஒரு வரலாற்று தருணம் என்று கூறி இருக்கிறார்.

நடிகர் மகேஷ் பதிவு:

சந்திரனின் தென் துருவத்தை நோக்கி ஒரு வெற்றிப் பயணம்! சந்திரயான் 3 இன் நேர்த்தியான தரையிறக்கம் இந்தியாவின் அறிவியல் மேன்மைக்கும், விண்வெளி ஆய்வில் மாபெரும் பாய்ச்சலுக்கும் ஒரு சான்றாகும்! வானமே எல்லை இல்லை!! வாழ்த்துக்கள் இஸ்ரோ குழு என கூறியுள்ளார்

நடிகர் சூர்யா பதிவு:

சந்திராயன் 3 பெருமை பட வேண்டிய தருணம்.

நடிகர் ஜெயம் ரவி பதிவு:

சந்திராயன்3 – தேசப் பெருமையின் கலங்கரை விளக்கத்துடன் இந்தியாவின் பிரபஞ்ச முன்னேற்றங்களுக்கு நன்றி என்று கூறி இருக்கிறார்.

Advertisement