டூப் இல்லாமல் பிரபல நடிகர்கள் செய்த ஆபத்தான ஸ்டண்ட் !

0
6808
Actors-stunt

சினிமாவில் உள்ள பல ஹீரோக்கள் ஆபத்தான ஸ்டண்ட் என்றால் அதற்கு டூப் போட்டு செய்துவிடுவார்கள். இல்லை எனில் VFX டெக்னாலஜி மூலம் ஆபத்தில்லாமல் எடுத்துக்கொள்வார்கள். அப்படி ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் படத்தில் தத்ரூபமான காட்சி அமைய்வதற்காக சில ஹீரோக்கள் உண்மையாகவே அந்த ஸ்டண்ட்கலை செய்வார்கள்.

அப்படி தமிழ் சினிமாவில் நடிகர்கள் உண்மையாகவே செய்துள்ள ஸ்டண்ட் காட்சிகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

1.அயன் படத்தில் சூரியா

இந்த படத்தில் பெரும்பாலான ஸ்டண்ட் காட்சிகள் சூரியா தானே செய்திருப்பார். டூப் இல்லாமல் அனைத்து காட்சிகளும் கட்சிதமாக செய்து அசத்தி இருப்பார்.

அதிலும் அந்த ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நடக்கும் சண்டை காட்சிகளில் எல்லாம் அவரே அனைத்து ஸ்டண்டையும் செய்திருப்பார்.
surya

surya

surya

2.ராவணன் படத்தில் விக்ரம்

ராவணன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பிரித்திவ் ராஜ் விக்ரமை சுடுவார். அப்போது விக்ரம் பின்னால் இருக்கும் பெரிய மலை பள்ளத்தாக்கில் விழுவார். அந்த பாள்ளதாக்கு மிகக் பெரிதாக இருக்கும்.

இந்த சீனில் எந்த ஒரு டூப் இல்லாமல் தானே நடித்துள்ளார் விக்ரம். VFX டெக்னாலஜியையும் பயன்படுத்தவில்லை.
vikram

vikram

vikram

vikram

vikram

3.பில்லா-2 படத்தில் அஜித்

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித்திற்கு வில்லன் வித்யுத்திற்கும் ஹெலிகாப்டரில் சண்டை நடக்கும்.

இதில் அஜித் கீழே தள்ளப்படுவார். அப்போது அஜித் ஹெலிகாப்டரை பிடித்துக்கொண்டு தொங்குவார். இதனை டூப் வைக்காமல் தானே நடித்துள்ளார் அஜித்.
Ajith

Ajith

Ajith

4.கபாலி படத்தில் ரஜினி

இந்த இடத்தில் வில்லன் இடத்தில் பென்ஸ் காரை கொண்டு போய் இடிப்பார் ரஜினிகாந்த். இந்த ஸ்டண்ட் காட்சி பார்க்க பெரிதாக இல்லை என்றாலும். ரஜினியின் வயதிற்கு இதை அவரே செய்தது பெரிது தான்.
rajini

rajini

rajini

1.தெறி படத்தில் விஜய்

இந்த படத்தில் விஜய் ஒரு பாலத்தில் மீது இருந்து தண்ணிக்குள் குதிப்பார். 90 அடி உயரம் கொண்ட இந்த பாலத்தில் இருந்து டூப் வைக்காமல் தானே குதித்து அசத்தி இருப்பார் விஜய்.
Vijay

Vijay

Vijay