ஜூலி நடிக்கும் படத்தில், ஜூலியின் பெயர் மற்றும் கதாப்பாத்திரம் இதுதான் !

0
1490

ஜல்லிக்கட்டு போராட்டத்தை தாண்டி பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் ஜூலி. அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் தற்போது கலைஞர் டீவியில் ஓடி விளையாடு பாப்பா என்ற ஒரு குழந்தைகள் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.
bigg-boss-julieபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் ஜூலி. இருந்தும் அவருக்கும் அதில் புகழ் கிடைத்தது. அப்படி கிடைத்த பிரபலத்தை வைத்து விமல் நடிக்கும் மன்னன் வகையறா என்ற படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்தார்.

அதனை தாண்டி ஒரு சில படங்களில் கமிட் ஆகியுள்ளார் ஜூலி. தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கவும் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் மற்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. கதைக்களம் பற்றியும் இன்னும் செய்திகள் வரவில்லை.

- Advertisement -

ஆனால், ஜுலி இந்த படத்தில் அவருடைய உண்மையான பெயரில் நடிக்கிறார். ஜூலியான என்ற பெயரில் நடிக்கும் இவர் ஒரு சமூக சேவகியாக நடிக்க போகிறாராம். இதனால் ஜுலி ரசிகர்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது என சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர்.

Advertisement