சண்டை காட்சியில் அமலாபாலுக்கு காயம்.! மருத்துவமனையில் செய்த செயலை பாருங்க.! விளாசும் ரசிகர்கள்

0
237
Amalapaul

தமிழில் கடந்த கே ஆர் வினோத் இயக்கத்தில் ‘அதோ என்று பறவை போல ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியை மையப்படுத்தி எடுத்து வரும் இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று கடந்த மார்ச் மாதம் வெளியாகி இருந்தது.

கதாநாயகியை மையப்படுத்தி எடுத்து வரும் இந்த படத்தில் நடிகை அமலா பால் ஒரு ஆக்ஷான் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதனால் நடிகை விஜயசாந்தி படத்தில் வருவது போல பறந்து பறந்து அடிக்கும் பல சண்டைக்காட்சிகளும் நடிகை அமலா பாலிற்கு இந்த படத்தில் இருக்கிறதாம்.

சமீபத்தில் இந்த படத்திற்கான சண்டை காட்சி ஒன்று கடந்த சனிக்கிழமை கொச்சினில் நடைபெற்று வந்தது. அந்த காட்சியில் நடித்த போது நடிகை அமலா பாலின் வலது கையில் தசை பிடிப்பு ஏற்பட்டு கையில் வலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பரவாயில்லை, காலை மாட்டும் பயன்படுத்தி சண்டை காட்சிகளை எடுக்கலாம் என்று அமலா பால் கூறியுள்ளார். எனவே, கைகளை பயன்படுத்தாமல் காலை மட்டும் பயன்படுத்தி தொடர்ந்து சண்டை காட்சியில் நடித்துள்ளார் அமலா பால்.

முதலில் தசை பிடிப்பு என்று நினைத்து வந்த நடிகை அமலா பால் படப்பிடிப்பிற்கு பின்னர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே மருத்துவ சோதனையில் அவரது கையில் தசை நார் கிழிந்துள்ளது என்று கண்டறியப்பட்டது. இதனால் நடிகை அமலா பாலிற்கு கையில் கட்டுபோட பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் கையில் கட்டோடு இருக்கும் அமலா பால் செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.