கீர்த்தி சுரேஷின் அம்மாவின் படத்தை எதிர்த்து பேரணி சென்ற பிராமணர்கள். இதான் காரணம்.

0
544
meganka
- Advertisement -

கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவின் படத்தை பிராமணர்கள் எதிர்த்து போராட்டம் செய்திருந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. அந்த வகையில் பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

கீர்த்தி சுரேஷின் அம்மா:

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவின் படத்தை பிராமணர்கள் எதிர்த்து போராட்டம் செய்திருந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேசை போல ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் மேனகா. இவர் 1980ஆம் ஆண்டு ராமாயி வயசுக்கு வந்துட்டா என்ற படத்தில் தான் அறிமுகமானார். அதே வருடம் சாவித்திரி என்ற படத்தில் நடித்தார். இந்த படம் 1975ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரயாணம் படத்தின் தமிழ் ரீமேக்.

சாவித்திரி படம்:

இந்த படத்தில் சாவித்திரி குட்டி என்ற இளம் நம்பூதிரி பெண்ணை வயதான தந்தை வறுமை காரணமாக இன்னொரு வயதான நம்பூதிரிக்கு திருமணம் செய்து வைக்கிறார். பின் நாளடைவில் இளம் ஒருவருடன் சாவத்திரி குட்டிக்கு தொடர்பு ஏற்படுகிறது. இந்த உண்மை கணவருக்கு தெரிய வந்து அவரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள். இறுதியில் சாவத்திரி குட்டி அந்த இளைஞரும் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்த படம் கேரளாவில் வணிகரீதியாக வெற்றி அடைந்தது. இந்த படத்தைதான் 1980இல் சாவித்திரி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேனகா படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு:

சாவித்ரிகுட்டி என்ற கதாபாத்திரத்தில் மேனகா நடித்து இருந்தார். கேரள நம்பூதிரி குடும்பத்தை தமிழில் பிராமண குடும்பம் ஆக்கினார்கள். பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக மேனகா நடித்திருந்தார். இதனை அடுத்து இந்த படத்தில் சில காட்சிகளை எடிட் செய்ய வேண்டும் என்றும், பிராமணர்கள் பற்றி இப்படி ஒரு காட்சிகள் வைத்ததால் ஆயிரக்கணக்கான பிராமணர்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி போராட்டம் செய்து கோரிக்கை வைத்திருந்தார்கள். அதில் சாவித்திரி படத்தை தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்டு இருந்தார்கள்.

மேனகா திரைப்பயணம்:

சாவித்திரி படத்தால் மேனகாவிற்கு கடும் எதிர்ப்பு வந்தது. அதற்கு பின் மேனகா நடித்த சிவாஜியின் கீழ் வானம் சிவக்கும், ரஜினியின் நெற்றிக்கண் போன்ற படங்கள் எல்லாம் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இவர் தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை வாங்கி தந்தது மலையாள திரைப்படங்கள் தான். இதனால் இவர் தொடர்ச்சியாக பல மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார். பின் 1987 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுரேஷ் குமாரை திருமணம் செய்துகொண்டார். அதற்கு பிறகு நடிப்பிலிருந்து விலகிய மேனகா தற்போது தொலைக்காட்சி தொடர், அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement